சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

செவித்திறன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை உலக செவித்திறன் தினத்தைக் கடைப்பிடித்தது

Posted On: 04 MAR 2024 3:53PM by PIB Chennai

செவித்திறன் குறைபாட்டைத் தடுக்கவும், அது குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மார்ச் 3 அன்று உலக  செவித்திறன் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறையின் கீழ், தேசிய பிராந்திய மையங்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு  ஏற்பாடு செய்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள அலி எவர் ஜங் தேசிய பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு மையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செவித்திறன் பரிசோதனை அனைத்து வயதினருக்கும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல், சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமான நிலைய நிர்வாகத்தினருக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.சத்தர்பூர் உள்ளிட்ட ஒட்டுமொத்த மண்டல மையங்கள் பல்வேறு ஆன்லைன் கருத்தரங்குகள், விழிப்புணர்வு பேரணிகள், பல்வேறு போட்டிகள் ஆகியவற்றை நடத்தின.

இந்த அணுகுமுறை நமது சமூகத்தை வலுப்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு  அதிகாரமளித்தலையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

AD/IR/RS/KRS



(Release ID: 2011329) Visitor Counter : 78


Read this release in: English , Urdu , Hindi