ஜல்சக்தி அமைச்சகம்

தூய்மைப் பசுமை இலை மதிப்பீட்டு முன்முயற்சி இந்திய சுற்றுலாத் துறையில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்துவதில் புரட்சியை ஏற்படுத்தும் - இது வெறும் அங்கீகாரம் மட்டுமல்ல, நமது சுற்றுலாத் துறையின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் செயல்பாடாகும்: மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்

Posted On: 02 MAR 2024 3:45PM by PIB Chennai

இந்தியாவின் சுற்றுலாத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு பெரிய நடவடிக்கையில், ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் துறை ஈடுபட்டுள்ளது. இந்த துறை சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து, தூய்மைப் பசுமை இலை மதிப்பீடு (எஸ்.ஜி.எல்.ஆர்) என்ற முன்முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைநோக்கு திட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இது தூய்மையான மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகளை நோக்கிய ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.

மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், நமது நாட்டின் விருந்தோம்பல் மற்றும் வளர்ச்சியின் தூதுவர்கள் என்ற வகையில், நமது சுற்றுலாத் தலங்களின் அழகியல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதில், சுற்றுலா தொடர்பான அனைத்து அமைப்புகளும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.  இது வெறும் அங்கீகாரம் மட்டுமல்ல எனவும் நமது சுற்றுலாத் துறையின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் செயல்பாடாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் நர்மதாபுரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள பைசன் சொகுசு தங்குமிடம் (ரிசார்ட்ஸ்), தூய்மைப் பசுமை இலை மதிப்பீட்டு சான்றிதழைப் பெற்று முன்னிலையில் உள்ளது. இந்த ரிசார்ட்டுக்கு மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

எஸ்ஜிஎல்ஆர் (SGLR) எனப்படும் தூய்மைப் பசுமை இலை மதிப்பீட்டு முன்முயற்சியானது, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்துடன் இணைந்ததாக உள்ளது. நிலையான சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை இது வளர்க்கிறது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இரண்டையும் இயற்கையுடன் இணக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற இது தூண்டுகிறது. இதன் மூலம், எஸ்ஜிஎல்ஆர் திட்டம் பொறுப்பான மற்றும் சிறந்த திறன் கொண்ட சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

ANU/AD/PLM/DL



(Release ID: 2010918) Visitor Counter : 81


Read this release in: English , Urdu , Hindi , Telugu