பாதுகாப்பு அமைச்சகம்

கோவா கடற்படை போர் கல்லூரியில் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் திறந்து வைக்கிறார்

Posted On: 01 MAR 2024 5:26PM by PIB Chennai

கோவாவில் கடற்படை போர்க் கல்லூரியின் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2024 மார்ச் அன்று திறந்து வைக்கிறார். நவீனக் கட்டிடம் சோழ வம்சத்தின் வலிமைமிக்க கடல்சார் பேரரசின் நினைவாக 'சோழர்என்று பெயரிடப்பட்டுள்ளது.

பாரதிய நௌசேனாவின் நடுத்தர மற்றும் மூத்த நிலை அதிகாரிகளுக்கு மேம்பட்ட தொழில்முறை ராணுவக் கல்வியை வழங்குவதற்காக கடற்படைப் போர்க் கல்லூரி 1988-ம் ஆண்டில் ஐ.என்.எஸ் கரஞ்சாவில் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி 2010-ல் கடற்படை போர்க் கல்லூரி என மறுபெயரிடப்பட்டது. 2011-ல் கோவாவில் அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. உயர் ராணுவக் கல்விக்கான முதன்மையான சின்னமான நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற  கண்ணோட்டத்துடன்கல்லூரி செயல்படுகிறது. ஆயுதப்படை அதிகாரிகளை உத்தி மற்றும் செயல்பாட்டு மட்டங்களில் தலைமைக்கு தயார்படுத்துவது இதன் நோக்கமாகும். இந்தக் கல்லூரி கடல்சார் பாதுகாப்பு பாடத்திட்டத்தையும் செயல்படுத்துகிறது. இதில் நமது கடல்சார் அண்டை நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் பங்கேற்று திறந்தபாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை வளர்ப்பதில் ஒத்துழைக்கிறார்கள்இது நமது பிரதமரின் 'சாகர்தொலைநோக்கு பார்வையைப் பிரதிபலிக்கிறது. கடற்படைப் போர்க் கல்லூரி இந்தியக் கடற்படையின் போர் விளையாட்டு மற்றும் ஆர்க்டிக் ஆய்வுகளுக்கான சிறப்பு மையமாகவும் உள்ளது.

கல்வி அறிவுறுத்தல்ஆராய்ச்சி மற்றும் போர் விளையாட்டுகளுக்காக கடற்படை போர் கல்லூரியின் கட்டிடம் சோழ வம்சத்தின் கடல் வலிமையால் ஈர்க்கப்பட்டது. கட்டமைப்பின் மையத்தில்  ஒரு சுவரோவியம் உள்ளதுஇது கி.பி 1025-ல் இந்தியப் பெருங்கடலைக் கடந்து, உயர் கடல்களைக் கடந்து ஸ்ரீவிஜயப் பேரரசுக்கு சென்ற ராஜேந்திர சோழனின் பயணத்தைச் சித்தரிக்கிறது. இந்த கட்டிடத்தின் பெயர் கடந்த காலத்தில் இந்தியாவின் கடல்சார் செல்வாக்கையும்நிகழ்காலத்தில் ஒரு கடல் சக்தியாக அதன் மறுமலர்ச்சியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைக்கிறது.

 

***

(Release ID: 2010660)

PKV/RS/KRS(Release ID: 2010729) Visitor Counter : 55


Read this release in: English , Urdu , Hindi , Marathi