பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பத்தாவது ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் – நீண்டகாலமாக நிலுவையில் உள்ள குறைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டன
இடுகை இடப்பட்ட நாள்:
01 MAR 2024 3:16PM by PIB Chennai
பணியாளர் நலன் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் நாடு தழுவிய 10-வது ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் நிகழ்ச்சி 22.2.2024 அன்று புதுதில்லியில் நடைபெற்றது.
ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாமில் உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு, நிதித் துறை, பொருளாதார விவகாரங்கள் துறை, முன்னாள் படைவீரர் நலத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் மற்றும் கலாச்சார அமைச்சகம் உள்ளிட்ட 12 அமைச்சகங்கள், துறைகள் கலந்து கொண்டன. இதில் 85 குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
***
PLM/AG/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2010597)
வருகையாளர் எண்ணிக்கை : 144