வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் தொழில்மயமாக்கலுக்கான கொள்கையை வகுக்க வேண்டியதன் அவசியத்தை அபுதாபியில் நடைபெற்று வரும் உலக வர்த்தக அமைப்பின் 13-வது அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது

Posted On: 29 FEB 2024 2:29PM by PIB Chennai

டிஜிட்டல் தொழில்மயமாக்கலுக்கான கொள்கையை வகுக்க வேண்டியதன் அவசியத்தை அபுதாபியில் நடைபெற்று வரும் உலக வர்த்தக அமைப்பின் 13-வது அமைச்சர்கள் மாநாட்டில் 2024 பிப்ரவரி 29 அன்று நடைபெற்ற மின் வணிகம் தொடர்பான பணித்திட்டம் குறித்த செயல்பாட்டு அமர்வில் இந்தியா வலியுறுத்தியது. டிஜிட்டல் தொழில்மயமாக்கலை ஊக்குவிப்பதற்காக உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகள் பின்பற்ற வேண்டிய அனைத்து கொள்கைகளும் வகுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

 

தற்போது, வளர்ந்த நாடுகளை தளமாகக் கொண்ட சில நிறுவனங்கள் தற்போது மின் வணிகத்தில் உலகளாவிய சூழலில் ஆதிக்கம் செலுத்திவருவதாக இந்தியா  குறிப்பிட்டது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய டிஜிட்டல் இடைவெளி உள்ளது என்றும், உலகளாவிய மின் வர்த்தகத்தில் வளரும் நாடுகளின் பங்களிப்பை அதிகரிப்பது சவாலாக உள்ளது என்றும் இந்தியா விளக்கியது.

*********

PKV/IR/AG/KRS

 


(Release ID: 2010121) Visitor Counter : 90


Read this release in: English , Urdu , Marathi , Hindi