வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வலுவான பொருளாதார அடிப்படைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூக நலத்திட்டங்கள் ஆகிய மூன்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கின்றன: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
प्रविष्टि तिथि:
27 FEB 2024 5:24PM by PIB Chennai
வலுவான பொருளாதார அடிப்படைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சமூக நலத் திட்டங்கள் ஆகிய மூன்றும் கடந்த பத்தாண்டுகளாக உலக வளர்ச்சியில் இந்தியாவை முன்னணிக்கு கொண்டு சென்றுள்ளன என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற மாநாட்டில்' உரையாற்றிய அமைச்சர், நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த பாரதமாக மாற்றும் முழுமையான மற்றும் விரிவான தொலைநோக்குப் பார்வைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று திரு பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் பொருளாதாரம் விரைவான வளர்ச்சிப் பாதையில் உள்ளது என்று அமைச்சர் கூறினார். வரவிருக்கும் ஆண்டுகளில் ஏற்றுமதியும், அதன் மூலமான வருவாயும் அதிகரித்து, நாட்டின் பொருளாதாரத்தை மேலும் உயர்த்த உதவும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று அவர் கூறினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் தெரிவித்தார். மோட்டார் வாகன உற்பத்தித் தொழில்துறை இந்தியாவில் வேகமாக வளர்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலக மதிப்புச் சங்கிலிகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறிய அமைச்சர், உலகின் தேவைகளை பூர்த்தி செய்யும் திறனை இந்தியா பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
***
(Release ID: 2009454)
ANU/PKV/PLM/RS/KRS
(रिलीज़ आईडी: 2009601)
आगंतुक पटल : 119