எரிசக்தி அமைச்சகம்

நாட்டின் முன்கள மின் துறை ஊழியர்களை மத்திய மின்சார ஆணையம் கவுரவிக்கவுள்ளது;

Posted On: 27 FEB 2024 3:02PM by PIB Chennai

நான்காவது மின் ஊழியர் தினம் 2024 மார்ச் 4 அன்று கொண்டாடப்படவுள்ளதையொட்டி, நாட்டின் முன்கள மின் துறை ஊழியர்களை மத்திய மின்சார ஆணையம் கவுரவிக்கவுள்ளது. நாடு முழுவதும் மின்சார விநியோகத்தின் முதுகெலும்பாக விளங்கும் மின் ஊழியர்கள், பராமரிப்பு ஊழியர்களின் அயராத அர்ப்பணிப்பு, சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. தில்லி டாடா மின்சார விநியோக நிறுவனத்துடன் இணைந்து நடைபெறும் கொண்டாட்டத்தின் மூலம் இது நாடு முழுவதும் உள்ள மின் ஊழியர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கிறது.

மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கு, குஜராத், ஒடிசா, அசாம், பீகார், சண்டிகர், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்க்கண்ட், தெலுங்கானா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பிற மாநிலங்கள் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மின் பகிர்மானம், விநியோக நிறுவனங்களைச் சேர்ந்த மின் ஊழியர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு மின்சாரத் துறையின் முன்களப் பணியாளர்களுக்கு ஒரு சிறந்த மன உறுதியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின் ஊழியர்கள் தங்கள் அனுபவங்கள், சவால்கள் மற்றும் கருத்துக்களை தேசிய நிகழ்வில் அதிகாரிகளுடனான உரையாடலில் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2009371 

***

ANU/PKV/IR/AG/KV

 



(Release ID: 2009456) Visitor Counter : 64


Read this release in: English , Urdu , Hindi