சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் குறுகிய கால பயிற்சி வகுப்பு
Posted On:
26 FEB 2024 12:01PM by PIB Chennai
காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் மாணவர்கள் கிளை இவை இரண்டும் இனைந்து “பொறியியல் பயன்பாடுகளுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் நுட்பங்கள்-கோட்பாடு மற்றும் பயிற்சி” என்ற தலைப்பில் நடத்தும் ஐந்து நாள் குறுகிய கால பயிற்சிவகுப்பானது கல்லூரியில் வளாகத்தில் இன்று காலை (26.02.2024) தொடங்கியது.
இப்பயிற்சிவகுப்பை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் சிஷாஜ் பி சைமன், கழகத்தின் பதிவாளர் முனைவர் சீ. சுந்தரவரதன், முனைவர். G. லட்சுமி சுதா, முனைவர். G. கோப்பெருந்தேவி ஆகியோர் முன்னிலையில் தொடங்கிவைத்தார். இப்பயிற்சி வகுப்பின் தொடக்கவிழாவில் சிறப்பி விருந்தினராக கலந்துகொண்ட முனைவர். சிஷாஜ் பி சைமன் அவர்கள் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப்பேசினார்.
இப்பயிற்சிவகுப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். A. வெங்கடேசன், விருந்தினர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வரவேற்றார். முனைவர். ராம் ஜெத்மலானி இப்பயிற்சிவகுப்பின் நோக்கங்கள் மற்றும் அமர்வுகள் குறித்து விளக்கிப்பேசினார்.
இப்பயிற்சிவகுப்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் துறையை சேர்ந்த நிபுணர்கள் உரையாற்றவுள்ளார்கள். இப்பயிற்சிவகுப்பில் இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து மொத்தம் 60 பங்கேற்பாளர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
பங்கேற்பாளர்களுக்கு கோட்பாடு மற்றும் நடைமுறை பயிற்சி இவை இரண்டும் அளிக்கப்படவுள்ளது. பங்கேற்பாளர்கள் புரிந்து கொள்ளும்வகையில் இப்பயிற்சிவகுப்பு தொடர்பான பாட புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சிவகுப்பின் ஏற்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பாளர் முனைவர். A. வெங்கடேசன் துறை உறுப்பினர்களின் உதவியோடு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
*********
PKV/KV
(Release ID: 2008981)
Visitor Counter : 61