குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டத்தை புறக்கணிப்பது முழு பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பாதிக்கும்

Posted On: 22 FEB 2024 3:20PM by PIB Chennai

கடற்பகுதியில் நாடுகளின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் மற்றும் சர்வதேசச் சட்டத்தைப் புறக்கணிப்பது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை ஆபத்திற்கு உட்படுத்தும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இன்று எச்சரித்தார். "அதுபோன்ற பிரச்சனைகளை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது பிராந்திய மோதல்களுக்கு அப்பால் செல்லக்கூடும்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

விசாகப்பட்டினத்தில் இன்று இந்திய கடற்படை ஏற்பாடு செய்திருந்த இந்திய கடல்சார் கருத்தரங்கில் (மிலன் 2024) உரையாற்றிய திரு தன்கர், நடைமுறை அடிப்படையிலான ஒழுங்கிற்கு எதிரான சவால் தற்போது அதிகரித்துள்ளது என்று எடுத்துரைத்தார், மேலும் அத்தகையை சவால்கள் உரிய தருணத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டடார்.

"சமீபத்திய ஆண்டுகளில், கடல்சார் களத்தில் வலிமையான பாதுகாப்பு சவால்களை இந்தியா கண்டது, இவை அமைதியை ஆபத்தில் ஆழ்த்தும் ஆற்றலைக் கொண்ட ஒரு புதிய, அச்சுறுத்தும் பரிமாணங்களைப் பெற்றுள்ளன, அமைதியற்ற விநியோகச் சங்கிலிகளைப் பற்றிப் பேச வேண்டாம்" என்று குடியரசுத் துணைதலைவர் அறிவுறுத்தினார்.

உலக நாடுகள் வணிகத்துக்கு கடற்பகுதியைச் சார்ந்திருப்பதை சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், கடல்சார் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி குறிப்பிட்டார். பிராந்தியத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கும், விநியோகச் சங்கிலி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் கடல்சார் ஒழுங்கை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது என்றார். உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாத்தல், ஆழமான பிராந்திய பதட்டங்களைத் தவிர்த்தல் மற்றும் நீலப் பொருளாதாரத்தைச் சுரண்டுதல் ஆகியவை உலகளாவிய கவலைகள் என்று கூறிய அவர், அவற்றை இனியும் புறக்கணிக்க முடியாது என்றார்.

மிலன் 2024 சர்வதேச கடல்சார் கருத்தரங்கில் பல நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் போர்க்கப்பல்கள் பங்கேற்றன.

***

ANU/PKV/BS/RS/KRS

 



(Release ID: 2008102) Visitor Counter : 41


Read this release in: English , Urdu , Hindi