கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் பழுதுபார்ப்பு குறித்த வெற்றிகரமான பயிலரங்கை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் நடத்தியது.
Posted On:
22 FEB 2024 1:45PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல் துறை செயலாளர் திரு டி.கே.ராமச்சந்திரன் தலைமையில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம், கப்பல் கட்டுமானம், கப்பல் பழுதுபார்ப்பை மையமாகக் கொண்ட ஒரு துடிப்பான மற்றும் கூட்டுப் பயிலரங்கை நடத்தியது. முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், கப்பல் பராமரிப்பு மற்றும் கட்டுமானத்தில் புதுமைகளை வளர்ப்பதற்கும் கடல்சார் தொழில்துறையின் முக்கியப் பங்குதாரர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைத்தது.
நிகழ்வில் பேசிய திரு டி.கே.ராமச்சந்திரன், பயிற்சி மற்றும் திறன் முயற்சிகள், பசுமை இழுவை மற்றும் படகுகளை நிர்மாணிப்பதற்கான திறனை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகள் மூலம் கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்ப்பதற்கான உள்நாட்டு திறனை மேம்படுத்துவதற்கான அரசின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். இந்தியா தொலைநோக்குத் திட்டம் 2030 மற்றும் கடல்சார் அமிர்த கால தொலைநோக்குத் திட்டம் 2047 ஆகியவற்றில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய இந்தியாவுக்கு உதவும் ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்கு மதிப்புச் சங்கிலியில் ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
கப்பல் கட்டுவது தொடர்பான அமர்வின் போது, கப்பல் கட்டும் களத்தின் உலகளாவிய போக்குகள், இந்தியாவில் தற்போதைய கப்பல் கட்டும் சந்தையின் நிலை ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கப்பட்டது. புகழ்பெற்ற பேச்சாளர்கள் ஆழ்ந்த கருத்துகளை வழங்கினர். கப்பல் கட்டுவதில் உள்ள போக்குகள் மற்றும் சவால்கள் மற்றும் கப்பல் துறையில் பசுமை முன்முயற்சிகளைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, கடல்சார் இந்தியா தொலைநோக்குத் திட்டம் 2030 மற்றும் கடல்சார் அமிர்த காலத் தொலைநோக்குத் திட்டம் 2047 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்ப்பு தொடர்பான இலக்குகள் குறித்த குறிப்பிட்ட விவாதங்கள் நடைபெற்றன. மத்திய அரசு தற்போது மேற்கொண்டு வரும் முன்முயற்சிகள் குறித்தும், இதன் மூலம் உலக கப்பல் கட்டும் சந்தையில் இந்தியா முன்னிலை வகிக்க முடியும் என்றும் கூறப்பட்டது.
கப்பல் பழுதுபார்க்கும் அமர்வு அதிக செலவுகள், உதிரிபாகங்கள் கிடைக்காதது, சுங்கம் தொடர்பான பிரச்சனைகள் போன்ற தற்போதுள்ள சவால்களில் கவனம் செலுத்தியது. அதன் பிறகு, கப்பல் பழுதுபார்ப்பில் உலகளாவிய முன்னணி நாடாக இந்தியா மாறுவதற்கான வருங்கால தீர்வுகளைச் சுற்றி விவாதங்கள் நடந்தன.
இந்த பட்டறை பங்கேற்பாளர்களுக்கு கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும், ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. நெட்வொர்க்கிங் அமர்வுகள் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களுக்கு வழிவகுத்தன மற்றும் கடல்சார் துறையின் நலன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால கூட்டு முயற்சிகளுக்கு அடித்தளம் அமைத்தன.
இந்த செயலமர்வில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்ற சர்வதேச பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டனர்.
***
ANU/PKV/BS/RS/KV
(Release ID: 2008058)
Visitor Counter : 111