சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய அஞ்சலக வங்கி சார்பில் காப்பீட்டு பலன்கள் மற்றும் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது

Posted On: 20 FEB 2024 7:33PM by PIB Chennai

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில், சென்னை மண்டலத்தில் விபத்தில் உயிரிழந்த டாடா ஏஐஜி நிறுவன காப்பீட்டுதாரருக்கு காப்பீட்டு பலன்களை வழங்கும் நிகழ்ச்சியும், ஆதார் கைப்பேசி எண் இணைப்பில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் இந்திய அஞ்சலக வங்கி சார்பில் சென்னையில் 17-02-2024  அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போதுஆதார் – கைப்பேசி எண் இணைக்கும் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அஞ்சல்  ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டதுடன் யுனிவர்சல் போஸ்டல் யூனியன் நடத்திய சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்திய அஞ்சலக வங்கி மூலமாக டாடா ஏஐஜி நிறுவனத்தில்  காப்பீடு செய்திருந்த பயனாளியான புருஷோத்தமன் காலமானதை அடுத்து அவரது நியமனதாரர் திரு. சி. இளங்கோவிடம், அஞ்சல் துறை தலைமை இயக்குநர் திருமதி ஸ்மிதா குமார் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, டாடா ஏஐஜி மூலமாக ரூ. 10 லட்சத்திற்கான தனிநபர் விபத்து காப்பீட்டு பாலிசியை ரூ.520/- வருடாந்திர பிரீமியத்திற்கு வழங்கிவருகிறது. 2022-2023 நிதியாண்டில் தமிழ்நாடு வட்டம் 81,000 க்கும் மேற்பட்ட பாலிசிகளை பதிவு செய்துள்ளது, இதில் 22181 பாலிசிகள் சென்னை நகர மண்டலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  அஞ்சல் துறை தலைமை இயக்குநர் திருமதி. ஸ்மிதா குமார், கலந்து கொண்டார். மேலும்தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத்தலைவர்  திருமதி.பிபி ஸ்ரீதேவி, சென்னை வட்ட அஞ்சல் துறைத்தலைவர் திரு. G. நடராஜன், சென்னை நகர மண்டலம், திரு.மேஜர் மனோஜ், இந்திய அஞ்சல வங்கி தனி இயக்குநர் திரு  ஏ.காளியண்ணன், இந்திய அஞ்சல வங்கி துணை பொது மேலாளர் திரு கோவிந்தராஜ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில பங்கேற்றனர்.

தமிழ்நாடு வட்டத்தின் உதவி பொது மேலாளர் திரு என் ஆர் திவாகரா நன்றியுரையாற்றினார்.

        

*********

AD/PLM/RS/DL


(Release ID: 2007521)
Read this release in: English