ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை காவலருக்கு குடியரசுத் தலைவரின் 'ஜீவன் ரக்ஷா பதக்கம்
Posted On:
19 FEB 2024 2:52PM by PIB Chennai
2024 குடியரசு தினத்தை முன்னிட்டு, ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை (RPSF) காவலர் திரு சஷிகாந்த் குமாருக்கு 2023-ம் ஆண்டிற்கான மதிப்புமிக்க 'ஜீவன் ரக்ஷா பதக்கத்தை' குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார். பெண் ரயில் பயணியின் உயிரைக் காப்பாற்றுவதில் திரு சஷிகாந்த் குமார் தைரியமான, விரைவான சிந்தனையுடன் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அவருக்கு இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.
2023 ஜூன் 8 அன்று, பிரயாக்ராஜ் சியோகி ரயில் நிலையத்தில், திரு சஷிகாந்த் குமார், பெண் பயணி கடுமையான ஆபத்தில் இருப்பதைக் கண்டபோது அசாதாரணமான துணிச்சலை வெளிப்படுத்தினார். பெண் பயணி ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது, அவர் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான இடைவெளியில் வழுக்கி விழுந்து ஓடும் ரயிலின் சக்கரங்களில் விழ இருந்தார். அப்போது சிறிதும் தாமதிக்காமல், குமார் செயலில் இறங்கி அந்த பெண் பயணியின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்தார்.
குமாரின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை ஒரு அபாயகரமான விபத்தைத் தடுத்தது, ரயில் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்கான அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவரது தன்னலமற்ற செயல் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையால் நிலைநிறுத்தப்பட்ட சேவை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பின் உயர்ந்த இலட்சியங்களை பிரதிபலிக்கிறது. சஷிகாந்த் குமாரின் முன்மாதிரியான தைரியம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான உறுதியான அர்ப்பணிப்புக்கு 'ஜீவன் ரக்ஷா பதக்கம்' ஒரு சான்றாகும். அவரது துணிச்சல் அவரது சக சகாக்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கிறது மற்றும் ஆர்பிஎஸ்எஃப்-இல் பொதிந்துள்ள உன்னத மதிப்புகளுக்கு ஒரு பிரகாசமான உதாரணமாக திகழ்கிறது.
***
ANU/AD/BS/RS/KV/DL
(Release ID: 2007091)
Visitor Counter : 120