பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லெப்டினன்ட் ஜெனரல் எம்.வி.சுசீந்திர குமாரிடமிருந்து லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி ராணுவ துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்

Posted On: 19 FEB 2024 2:08PM by PIB Chennai

லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி 2024  பிப்ரவரி 19 அன்று ராணுவத் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர், தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ராணுவ துணைத் தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி 2022-2024 முதல் மிகவும் சவாலான செயல்பாட்டு சூழலில் வடக்கு கட்டளையின் பொது அதிகாரி கமாண்டிங்-இன்-சீஃப்-ஆக பதவி வகித்தார்.

ரேவா சைனிக் பள்ளியின் முன்னாள் மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி 1984-ஆம் ஆண்டில்  ஜம்மு & காஷ்மீர் 18 ரைபிள்ஸில் நியமிக்கப்பட்டார்.

39 ஆண்டுகளில் நீடித்த அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில், நாட்டின் சவாலான செயல்பாட்டு சூழல்களில் கட்டளை நியமனங்களை அவர் வகித்துள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், ராஜஸ்தானிலும் அவர் படைப்பிரிவுக்கு தலைமை வகித்தார். வடகிழக்கில் தீவிர பயங்கரவாத எதிர்ப்பு சூழலில் அசாம் ரைபிள்ஸின் செக்டர் கமாண்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்துள்ளார்.

ராணுவத்தின் மிகப்பெரிய ராணுவக் கட்டளையை நவீனமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அங்கு அவர் தற்சார்பு இந்தியாவின் ஒரு பகுதியாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தளவாடங்களை ராணுவத்துக்கு கொள்முதல் செய்வதில் தீவிரம் காட்டினார். ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுடன் இணைந்து தேச நிர்மாண விளைவுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை அவர் ஒருங்கிணைந்தார்.

***

ANU/PKV/BS/RS/KV/DL


(Release ID: 2007088) Visitor Counter : 113


Read this release in: English , Urdu , Hindi