கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கப்பல் துறையிலுள்ள நிதி, காப்பீட்டு சவால்கள் குறித்தப் பயிலரங்கை துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சகம் வெற்றிகரமாக நடத்தியது
प्रविष्टि तिथि:
14 FEB 2024 6:52PM by PIB Chennai
கப்பல் துறையிலுள்ள நிதி, காப்பீட்டு சவால்கள் குறித்தப் பயிலரங்கை துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சகம் வெற்றிகரமாக நடத்தியது. புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கடல்சார் துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்தப் பயிலரங்கின் முதல் அமர்வாக நிதிச் சவால்களை ஆராய்வது குறித்தும், இரண்டாவது அமர்வாக கப்பல் துறையில் காப்பீடு மீது கவனம் செலுத்துதல் குறித்தும் நடைபெற்றது. இந்தியாவில் கப்பல் உரிமை, கப்பல் கட்டும் திறன் ஆகியவற்றில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டனர்.
கப்பல் தொழிலில் உள்ள சவால்களுக்கு தீர்வுகள் காண்பது குறித்து தொழில் வல்லுநர்கள், கப்பல் தொழிலில் தொடர்புடையவர்கள் இடையே ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றதாக கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலாளர் திரு டி.கே.ராமச்சந்திரன் கூறினார்.
-----
(Release ID: 2006024)
ANU/AD/IR/KPG/KRS
(रिलीज़ आईडी: 2006056)
आगंतुक पटल : 121