சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப் பொருள் இல்லா இந்தியா இயக்கத்தின் கீழ், பிரம்ம குமாரிகள் அமைப்புடன் இணைந்து தில்லி பகுதியில் விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தை மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
14 FEB 2024 11:32AM by PIB Chennai
போதைப்பொருள் இல்லாத இந்தியாவின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கும் மத, ஆன்மீக அமைப்புகளுடன் இணைந்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (14 பிப்ரவரி, 2024) மாலை 4:00 மணிக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் முன்னிலையில் பிரச்சார வாகனம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இது தில்லியில் விழிப்புணர்வுப் பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
முன்னதாக, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், 2023 மார்ச் 4 ஆம் தேதி, போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் கீழ், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் போன்றவர்களிடையே விழிப்புணர்வை பரப்புவதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
போதைப்பொருள் இல்லாத இயக்கத்தின் கீழ், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சில முக்கிய பணிகள்:
- களத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இதுவரை 10 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் 8,000 முதன்மை தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
- 3.38 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்று, போதைப்பொருள் தடுப்பு குறித்த செய்தியைப் பரப்பியுள்ளனர்.
- பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் திறம்பட விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
- பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையில் அனைத்துப் போதை மறுவாழ்வு மையங்களும் புவிக்குறியீடு செய்யப்பட்டுள்ளன.
----------------
ANU/PKV/PLM/RS/KV
(रिलीज़ आईडी: 2005823)
आगंतुक पटल : 145