மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் ஆரோவில் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றுள்ள மாணவர்கள் அதன் நிலையான நடைமுறைகள் குறித்து கற்றுக்கொள்கின்றனர்

இடுகை இடப்பட்ட நாள்: 31 JAN 2024 5:36PM by PIB Chennai

புதுதில்லி, ஜனவரி 31, 2024

ஒரே பாரதம், உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் புதுச்சேரி ஆரோவில் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றுப்பயணத்தில் பங்கேற்றுள்ள மாணவர்கள், பயணத்தின் 3-வது நாளில், ஆரோவில் தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் நிலையான நடைமுறைகளை அறிந்துகொண்டனர். 

தாவரவியல் பூங்காவில் கல்விச் சுற்றுலாவுடன் 3-வது நாள் சுற்றுப்பயணம் தொடங்கியது. பல்வேறு உயிரினங்களைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நேரில் பார்வையிட்ட மாணவர்கள், நுணுக்கமான வகையில் வடிவமைக்கப்பட்ட தோட்டங்களையும், அவற்றின் தனித்துவமிக்க வளர்ப்பு முறைகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

கட்டடக்கலைத் தொடர்பான அமர்வுகளில் அதன் வடிவமைப்பு கொள்கைகள் குறித்து கற்றுக்கொண்டனர். இயற்கை ஒருங்கிணைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடைமுறைகள் ஆகியவை குறித்தும் அவர்கள் அறிந்துகொண்டனர்.

தியானம், யோகா பயிற்சி போன்றவற்றுடன் 3-வது நாள் சுற்றுப்பயணம் தொடர்ந்தது. மாலையில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

----

(Release ID: 2000907)

ANU/SV/PLM/KPG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 2000991) வருகையாளர் எண்ணிக்கை : 141
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी