சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

இந்தியாவில் பனிச்சிறுத்தைகளின் நிலை அறிக்கையை திரு பூபேந்தர் யாதவ் வெளியிட்டார்

Posted On: 30 JAN 2024 1:33PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியக் கூட்டத்தில் இந்தியாவில் பனிச்சிறுத்தைகளின் நிலை குறித்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வெளியிட்டார். இந்தியாவில் பனிச்சிறுத்தை மதிப்பீடு திட்டம் என்பது இந்தியாவில் பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கையை மதிப்பிடும்  திட்டமாகும்.

இந்திய வனவிலங்கு நிறுவனம் இந்தப் பயிற்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளது. லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம்,  அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் உட்பட இமயமலைப் பிராந்தியத்தில் சுமார் 120,000 சதுர கி.மீ பரப்பில் பனிச்சிறுத்தை வாழ்விடத்தை கண்டறியும் பயிற்சி 2019 முதல் 2023 வரை நடத்தப்பட்டது. அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு அடுக்கு பகுதியிலும் கேமரா பொறிகளைப் பயன்படுத்தி பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டது.

தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களில் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை பின்வருமாறு: லடாக் (477), உத்தரகண்ட் (124), இமாச்சலப் பிரதேசம் (51), அருணாச்சலப் பிரதேசம் (36), சிக்கிம் (21), ஜம்மு-காஷ்மீர் (9).

 

***

ANU/SMB/PKV/RS/KRS



(Release ID: 2000652) Visitor Counter : 75


Read this release in: English , Urdu , Marathi , Hindi