பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செவிலியர் கல்லூரியின் பிஎஸ்சி (எச்) செவிலியர் மாணவர்களின் 10 வது தொகுப்புக்கான தொடக்க விழா தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நடைபெற்றது.

Posted On: 29 JAN 2024 2:51PM by PIB Chennai

செவிலியர் கல்லூரியின் பிஎஸ்சி (எச்) செவிலியர் மாணவர்களின் பத்தாவது தொகுப்புக்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா 2024, ஜனவரி 29 அன்று தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனை ஆயுர்விஞ்ஞான் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் 30 செவிலியர் மாணவர்கள் சீருடை அணிந்து தங்கள் தொழில்முறைப் பயணத்தை பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் தொடங்கினர்.

 

இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக ராணுவ மருத்துவமனையின் கமாண்டன்ட் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அஜித் நீலகண்டன், கௌரவ விருந்தினராக மேஜர் ஜெனரல் இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

லெப்டினன்ட் ஜெனரல் நீலகண்டன் மற்றும் பிற பிரமுகர்களால் விளக்கேற்றலுடன் விழா தொடங்கியது. ஞானத்தின் சுடர் மேஜர் ஜெனரல் இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோராவால் கர்னல் டெச்சென் சோடனுக்கு வழங்கப்பட்டது. அவர் அதை மாணவர்களுக்கு வழங்கினார். இது ஆசிரியர்களிடமிருந்து 30 புதிய நர்சிங் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது அறிவுப் பரிமாற்றத்தைக் குறிக்கிறது. மேஜர் ஜெனரல் ஷீனா பி.டி., முதல்வர் மேட்ரன், ஏ.எச் (ஆர் &.ஆர்) செவிலியர் உறுதிமொழி செய்துவைத்தார்.

 

2022-2023 கல்வியாண்டிற்கான சிறந்த மாணவர்களுக்கு ராணுவ மருத்துவமனை கமாண்டன்ட் விருது வழங்கினார். மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி (எச்) நர்சிங்கில் முதலிடம் பிடித்ததற்காக முஸ்கான் சர்மாவுக்கு புஷ்பனரஞ்சன் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

***

(Release ID: 2000335)

ANU/SMB/KRS


(Release ID: 2000385) Visitor Counter : 121


Read this release in: English , Urdu , Hindi