சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சமூகத் தணிக்கை ஆலோசனை அமைப்பின் முதல் கூட்டம் நடைபெற்றது
Posted On:
22 JAN 2024 4:41PM by PIB Chennai
சமூக தணிக்கை ஆலோசனை அமைப்பின் முதலாவது கூட்டம் 2024, ஜனவரி 18 அன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் தலைமை வகித்தார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மாற்றுத்திறனாளிகள் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், தேசிய கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம், டாடா சமூக அறிவியல் நிறுவனம், தில்லி சமூகப் பணி பள்ளி மற்றும் இந்தியப் பொது நிர்வாக நிறுவனம் உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் சமூகத் தணிக்கை செயல்முறையை வலுப்படுத்தவும், சமூகநீதிக் கொள்கைகளுடன் அதை செயல்படுத்தவும் மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினர்.
***
(Release ID: 1998569)
ANU/SMB/PLM/AG/KRS
(Release ID: 1998665)
Visitor Counter : 120