பாதுகாப்பு அமைச்சகம்

இளைஞர்கள் சிறந்து விளங்குவதற்கும், நாட்டைக் கட்டமைப்பதில் பங்களிப்பதற்கும் தேசிய மாணவர் படையினர் முன்மாதிரியாக உள்ளனர்: என்.சி.சி குடியரசு தின முகாம் 2024-ல் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்

Posted On: 17 JAN 2024 6:08PM by PIB Chennai

இளைஞர்கள் சிறந்து விளங்குவதற்கும், நாட்டைக் கட்டமைப்பதில் பங்களிப்பதற்கும் தேசிய மாணவர் படையினர் முன்மாதிரியாக உள்ளனர் என்று தில்லி கண்டோன்மென்ட்டில் 2024, ஜனவரி 17, அன்று நடைபெற்ற தேசிய மாணவர் படை குடியரசு தின முகாமில் பங்கேற்ற பாதுகாப்பு செயலாளர் திரு கிரிதர் அரமானே தெரிவித்தார். தேசிய மாணவர் படை (என்சிசி) தொலைநோக்குப் பார்வையுடன், இளைஞர்களை உற்சாகப்படுத்தி, அவர்களை சிறந்த மக்களாக பயிற்றுவிக்கிறது என்று அவர் கூறினார். என்.சி.சி.யை விரிவுபடுத்துவதற்கான நோக்கம் நாடு முழுவதும் உள்ள அதிகமான இளைஞர்களை மிகப்பெரிய சீருடை இளைஞர் அமைப்பில் சேர ஊக்குவிப்பதும், அதன் நன்மைகளை ஆராய்வதும் ஆகும் என்று அவர் மேலும் கூறினார்.

இளைஞர்கள் மெத்தனப்போக்கை கைவிட்டு, தங்கள் இலக்குகளை அடைய அதிக இலக்கை அடைய வேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார். "அதிக ஆற்றல் கொண்ட இளைஞர்கள், சரியாக வழிநடத்தப்படாவிட்டால், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார். இளைஞர்களுக்கு முறையாக கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றும், இது ஆக்கப்பூர்வமான நாட்டின் பொருளாதாரம், செழிப்புக்கு பங்களிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

17 என்.சி.சி இயக்குநரகங்களால் வடிவமைக்கப்பட்ட 'கொடிப் பகுதியை' பாதுகாப்புச் செயலாளர் பார்வையிட்டார்.  இதில் மணல் மாதிரிகள் மூலம் சமூக நலத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

---- 

(Release ID: 1997025)

ANU/SM/IR/KPG/KRS



(Release ID: 1997073) Visitor Counter : 100


Read this release in: English , Urdu , Hindi