பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
டிசம்பர் 2023 மாதத்திற்கான சிபிஜிஆர்எம்எஸ் குறித்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் செயல்திறன் குறித்த 17 வது அறிக்கை நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையால் வெளியிடப்பட்டது
Posted On:
12 JAN 2024 12:38PM by PIB Chennai
2023 டிசம்பர் மாதத்திற்கான மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான மையப்படுத்தப்பட்ட மக்கள் குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பின் (சிபிஜிஆர்எம்எஸ்) 17-வது மாதாந்திர அறிக்கையை நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை (டிஏஆர்பிஜி) வெளியிட்டது. இந்த அறிக்கை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் தீர்வுகாணப்பட்ட பொதுமக்களின் குறைகளின் வகைகள் மற்றும் அதன் தன்மை பற்றிய விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.
2023 டிசம்பரில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மொத்தம் 58,183 குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 31, 2023 நிலவரப்படி, சிபிஜிஆர்எம்எஸ் இணையதளத்தில் பெறப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் 1,82,451 புகார்கள் நிலுவையில் உள்ளன.
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் நிலுவையில் உள்ள புகார்கள் 2023 நவம்பர் இறுதியில் 1,82,058 ஆக இருந்தது. இது 2023 டிசம்பர் இறுதியில் 1,82,451 புகார்களாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, 16 மாதங்களாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மாதந்தோறும், 50 ஆயிரம் புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டது.
2023-ம் ஆண்டிற்கான சிபிஜிஆர்எம்எஸ் ஆண்டறிக்கை மற்றும் சிபிஜிஆர்எம்எஸ் மொபைல் செயலி பயன்பாட்டை 19 டிசம்பர் 2023 அன்று நல்லாட்சி வாரம் 2023-ன் தொடக்க விழாவில், மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவிஅறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர்அலுவலகம், பணியாளர்நலன், பொதுமக்கள்குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.
.2023 டிசம்பர் 20, அன்று, முகநூல் வாயிலாக கலந்துரையாடல் நடைபெற்றது, அங்கு நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளர் திரு வி. ஸ்ரீநிவாஸ், பொது சேவை மையங்களின் (சி.எஸ்.சி) கிராமத் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினார் மற்றும் இதுவரை சி.எஸ்.சி - சி.பி.ஜி.ஆர்.எம்.எஸ் ஒத்துழைப்பு குறித்து விரிவான செயல் விளக்கங்களை வழங்கினார். 2023-ம் ஆண்டில், சுமார் 98 ஆயிரம் புகார்கள் சி.பி.ஜி.ஆர்.எம்.எஸ் இணைய தளத்தில் பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023 டிசம்பர் மாதத்தில் பொது சேவை மையங்கள் மூலம் மொத்தம் 6,976 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அக்டோபர், 2023 முதல், பொது சேவை மையங்கள் மூலம் மாதந்தோறும் 20-ம் தேதி சி.எஸ்.சி-சி.பி.ஜி.ஆர்.எம்.எஸ் தினம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1995437
***
ANU/PKV/BS/AG/RR
(Release ID: 1995468)
Visitor Counter : 107