சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கோதுமை, அரிசி ஆகியவற்றுக்கான மின் சந்தை ஏலம்- வெளிச்சந்தை விநியோகத்தை அதிகரிக்க இந்திய உணவுக் கழகம் நடவடிக்கை

Posted On: 10 JAN 2024 7:54PM by PIB Chennai

வெளிச்சந்தையில் கோதுமை மற்றும் அரிசியின் சில்லறை விலையை கட்டுப்படுத்துவதற்காக அவற்றை தனியார் வர்த்தகர்களுக்கு ஏலம் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்திய உணவுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டலம் 23.06.2023 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோதுமை மற்றும் அரிசி விற்பனைக்கான மின்னணு ஏலத்திற்கு ஒப்பந்தப் புள்ளியை கோரி வருகிறது.

கோதுமை, அரிசி பொருட்களின் பதிவு செய்யப்பட்ட மொத்த விற்பனையாளர்கள்,  வர்த்தகர்கள், உற்பத்தியாளர்களுக்கு திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் கிடங்குகளிலிருந்து அவை வழங்கப்படும்.   தமிழ்நாடு மண்டல உணவுக் கழகம் வாராந்திர மின்-ஏலங்களை நடத்துகிறது,  https://www.valuejunction.in/fci வாங்குபவர்கள் / வர்த்தகர்களை பணியமர்த்துவது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்

மற்றும் கோதுமை அரிசியை வாங்குவோர் / வர்த்தகர்கள் மின்-ஏலத்தில் பங்கேற்க https://www.valuejunction.in/fci  என்ற தளத்தின் மூலம்  ஏல நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விருப்பம் உள்ள வர்த்தகர்கள் இந்த இணையதளத்தில் மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

###

 AD/PLM/KPG/KRS

 


(Release ID: 1994970)
Read this release in: English