பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
"மின் ஆளுகை" என்ற கருப்பொருளில் பிராந்திய மாநாடு குவஹாத்தியில் இன்று தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
09 JAN 2024 6:44PM by PIB Chennai
அசாம் அரசுடன் இணைந்து மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை ஏற்பாடு செய்துள்ள "மின் ஆளுகை" என்ற கருபொருளிலான இரண்டு நாள் பிராந்திய மாநாடு குவஹாத்தியில் இன்று தொடங்கியது. அசாம் ஆளுநர் திரு குலாப் சந்த் கட்டாரியா மற்றும் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
தொடக்க அமர்வில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியின் நிர்வாக சீர்திருத்தங்கள் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு உதவியுள்ளன என்றார். வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எதிரொலிப்பதாக அவர் கூறினார்.
நிர்வாகத்தை எளிதாக்குவதற்கும், சேவைகளை எளிதாக வழங்குவதற்கும் மத்திய அரசால் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அனைத்துப் பகுதிகளும் முன்னேற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தார். குடிமைப் பணிகள் தினம், நல்லாட்சிக் குறியீடு, பிராந்திய மாநாடுகள் போன்ற முன்முயற்சிகள் வடகிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
------
(Release ID: 1994620)
ANU/SM/PLM/KPG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1994663)
வருகையாளர் எண்ணிக்கை : 154