சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெற்றிகரமாக திறந்து வைக்கப்பட்ட "அமெதிஸ்ட்" விடுதி திருச்சிராப்பள்ளி என்.ஐ.டி.க்கு ஒரு மைல்கல்லாகும்

Posted On: 02 JAN 2024 8:00PM by PIB Chennai

திருச்சிராப்பள்ளி என்ஐடியில் 41 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள "அமெதிஸ்ட்" விடுதியை ஆளுநர் திரு ஆர் என் ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து, எஃகு அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம் சிந்தியா, மக்களவை உறுப்பினர் திரு எஸ்.திருநாவுக்கரசர், தமிழக தொழில்நுட்பக் கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன், சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் திரு ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் முன்னிலையில் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

1.2 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த விடுதியின் கட்டிடக்கலை கம்பீரம் அதன் நோக்கம் சார்ந்த வடிவமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. 253 மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட அறைகளைக் கொண்ட இந்த விடுதியில் 506 மாணவர்கள் தங்கும் வகையில், பொருளாதாரத்தில் நலிவடைந்த 1500 மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தனித்துவமான கவனம் செலுத்தப்படுகிறது.

உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதன் மூலம் மாணவர்களின் விரிவான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில் "அமெதிஸ்ட்" விடுதி முன்னேற்றத்தின் அடையாளமாக உள்ளது. இந்த அதிநவீன வசதி நிறுவனத்தின் தற்போதைய நட்சத்திர நற்பெயரை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், அதை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. சர்வதேச தரத்திற்கு இணையான நவீன வசதிகளுடன் கூடிய "அமெதிஸ்ட்" விடுதி, திருச்சிராப்பள்ளி என்.ஐ.டி.யின் துடிப்பான, முன்னோக்கிய சிந்தனை பண்புகளை பிரதிபலிக்கிறது. 2023-24ம் கல்வியாண்டில் இந்நிறுவனம் தனது வைரவிழா ஆண்டில் நம்பிக்கையுடன் முன்னேறி செல்லும் நிலையில், முன்னேற்றம், சிறப்பு, முழுமையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சூழலை ஏற்படுத்துவதன் மூலம் உயர்கல்வியில் புதிய குறியீட்டை பிரதிபலிக்கிறது .

 

***

SM/IR/RS/KRS



(Release ID: 1992512) Visitor Counter : 76


Read this release in: English