நிதி அமைச்சகம்
பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
Posted On:
01 JAN 2024 5:17PM by PIB Chennai
2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரத் திட்டத்தை, 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு எண். 20-ஐ (நவம்பர் 7, 2022 தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி திருத்தப்பட்டது) பயன்படுத்தி மத்திய அரசு அறிவித்துள்ளது . இத்திட்டத்தின் விதிமுறைகள்படி, இந்தியக் குடிமகன் அல்லது இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நபர் (அரசிதழ் அறிவிப்பின் பிரிவு எண். 2 (டி ) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி) தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். தனிநபராக இருக்கும் ஒருவர், தனியாகவோ அல்லது மற்ற நபர்களுடன் கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (43 இன் 1951) பிரிவு 29ஏ -இன் கீழ் பதிவு செய்யப்பட்ட, கடந்த பொதுத் தேர்தலில் மக்களவைக்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ மாநிலத்தின் மொத்த வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்ற. ,அரசியல் கட்சிகள் மட்டுமே, தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதியுடையவையாகும் தேர்தல் பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே தகுதியான அரசியல் கட்சியால் பணமாக்க முடியும்.
02.01.2024 முதல் 11.01.2024 வரை, 30-ம் கட்ட விற்பனையில், பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகள் மூலம் தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கும், பணமாக்குவதற்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குதான் செல்லுபடியாகும். செல்லுபடியாகும் காலம் முடிந்த பின் தேர்தல் பத்திரம் டெபாசிட் செய்யப்பட்டால், பணம் பெறும் எந்த அரசியல் கட்சிக்கும் பணம் செலுத்தப்பட மாட்டாது. தகுதியான அரசியல் கட்சி தனது கணக்கில் டெபாசிட் செய்யும் தேர்தல் பத்திரம் அதே நாளில் வரவு வைக்கப்படும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் பத்திரம் விற்கும் கிளையின் முகவரி
சென்னை முதன்மைக் கிளை, 336/166, தம்புச்செட்டி தெரு, பாரிமுனை, சென்னை
தமிழ்நாடு - 600 001
கிளையின் குறியீட்டு (கோட்) எண்: 00800
***
ANU/PKV/SMB/AG/KRS
(Release ID: 1992194)
Visitor Counter : 146