நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி அமைச்சகத்தின் 2023-ஆம் ஆண்டின் சாதனைகள்

Posted On: 29 DEC 2023 6:29PM by PIB Chennai

"வணிக ரீதியான நிலக்கரி சுரங்கம் என்பது அதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் சூழலைக் கொண்டதாகும்.  தொழில், வியாபாரம், முதலீடுகளுக்கு புதிய வளங்களும், சந்தைகளும் கிடைக்கும். இதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிக வருவாய் கிடைப்பதுடன், நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும். இதன் பொருள், ஒவ்வொரு துறையிலும் நேர்மறையான தாக்கம் இருக்கும்" என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமரின் மேற்கண்ட வார்த்தைகள் இந்தியாவின் நிலக்கரித் துறையின் உத்திபூர்வமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நிலக்கரி அமைச்சகத்தின் இடைவிடாத முயற்சிகள் 2023 ஆம் ஆண்டில் நாட்டின் முக்கிய தொழில்களில் இந்தியாவின் நிலக்கரி துறைக்கு ஒரு சிறப்பு இடத்தை அளித்தன. அக்டோபர் 2023 இல், எட்டு முக்கிய தொழில்களில், இந்தியாவின் நிலக்கரித் துறை குறிப்பிடத்தக்க அளவில் 18.4% வளர்ச்சியை அடைந்துள்ளது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தொழில்கள் செயல்திறன் குறியீட்டெண் மூலம் தெரியவந்துள்ளது.

பல்வேறு புதுமையான சீர்திருத்தங்கள் மூலம் மேற்கண்ட வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் நிலக்கரி அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முன்முயற்சிகளில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது, வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தை அதிகரிப்பது, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சுரங்க முன்னெடுப்பாளர் மற்றும் ஆபரேட்டர்களை ஈடுபடுத்துவது மற்றும் உற்பத்தியை அதிகரிக்க வருவாய் பகிர்வு முறையில் நிறுத்தப்பட்ட சுரங்கங்களை மீண்டும் திறப்பது ஆகியவை அடங்கும்.

மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி 9-வது சுரங்கங்களுக்கான சுற்று வர்த்தக ஏலத்தை டிசம்பர்21-ம் தேதி தொடங்கி வைத்தார். 9-வது சுற்றில் 26 நிலக்கரி சுரங்கங்களும், 7-வது சுற்றின்2-வது    முயற்சியின் கீழ் 5 நிலக்கரி சுரங்கங்களும் என மொத்தம் 31 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன.     இந்தச் சுரங்கங்கள் நிலக்கரி / பழுப்பு நிலக்கரி கொண்ட ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ளன.

2023-2024 ஆம் ஆண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி ஒரு பில்லியன் டன்னைத் தாண்ட வாய்ப்புள்ளது. சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, 2023-24ம் நிதியாண்டில் டிசம்பர் 25 வரை நிலக்கரி உற்பத்தி 664.37 மில்லியன் டன்னை எட்டியுள்ளது.  8.39% வளர்ச்சியுடன், இந்தக் காலகட்டத்தில் மின் துறைக்கு நிலக்கரி ஏற்றுமதி 577.11 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. எனவே, இந்தியாவின் நிலக்கரித் துறையின் தற்போதைய வளர்ச்சி "தற்சார்பு இந்தியா" என்ற தொலைநோக்குக்கு ஏற்ப செயல்படுகிறது. தன்னிறைவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை நோக்கிய நாட்டின் முன்னேற்றத்திற்குக் கணிசமான பங்களிப்பை அளிக்கிறது.

நிலக்கரி அமைச்சகம் மற்ற அமைச்சகங்களுடன் இணைந்து மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் 2023 ஆம் ஆண்டில் நிலக்கரியைத் தடையின்றி கொண்டு செல்வதற்கான ரேக் கிடைப்பதை உறுதி செய்தன. இந்த ஆண்டில்அனல் மின் நிலையங்கள் மற்றும் பிற முக்கிய துறைகளுக்கு தரமான நிலக்கரி போதுமான அளவு கிடைப்பதை அமைச்சகம் உறுதி செய்துள்ளது, இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் வெற்றிக்கு மேலும் ஊக்கமளிக்கிறது.

 

ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேலும் மேம்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலத்தடி நிலக்கரி உற்பத்தியில் சிறப்பு கவனம் செலுத்துதல், இறக்குமதியை மிகக் குறைந்தபட்சமாகக் குறைத்தல், நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டங்கள், வெற்றிகரமான வணிக நிலக்கரி சுரங்க ஏலம் மற்றும் நிலையான சுரங்க நடைமுறைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பல சீர்திருத்தங்கள் / கொள்கை நடவடிக்கைகளால் 2023 ஆம் ஆண்டில்  அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்குப் பதிலாக உள்நாட்டில் தோண்டியெடுக்கப்பட்ட நிலக்கரியுடன் மாற்றுவதன் மூலம் தற்சார்பு இந்தியாவை நனவாக்கவும், நிலக்கரி அமைச்சகம் 2025ம் நிதியாண்டில் 1.31 பில்லியன் டன் மற்றும் 2030ம் நிதியாண்டில் 1.5 பில்லியன் டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. செலவு குறைந்த, வேகமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நிலக்கரி போக்குவரத்தை மேம்படுத்துவது நாட்டின் முக்கிய குறிக்கோளாகும்.

எதிர்காலத்தில் நிலக்கரி வெளியேற்றம் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அருகிலுள்ள ரயில்வே மூலம்  கட்டமைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட தேசிய நிலக்கரி தளவாடத் திட்டத்தை உருவாக்குவதில் நிலக்கரி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

*** 

ANU/PKV/BS/KPG/KV



(Release ID: 1992129) Visitor Counter : 169


Read this release in: English , Hindi