குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
"நீங்கள் முதலிலும், கடைசியிலும் இந்தியர்களாக இருக்க வேண்டும், இந்தியர்களைத் தவிர வேறு யாருமாக இருக்கக் கூடாது" என்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வார்த்தைகளை குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார்
Posted On:
26 DEC 2023 2:47PM by PIB Chennai
ரோத்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் இன்று உரையாற்றினார்.
இன்றைய இளைஞர்களுக்குக் கிடைக்கின்ற பரந்த வாய்ப்புகளை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர், பட்டதாரிகள் தங்கள் சொந்த வெற்றிக் கதைகளை எழுத ஊக்குவித்தார். "இன்றைய சூழலில் "முடியாதது எதுவுமில்லை, என்ற வார்த்தையே 'என்னால் முடியும்!' என்பதை கூறுகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
பட்டமளிப்பு விழா ஒரு சகாப்தத்தின் முடிவு மற்றும் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு 'கசப்பான, இனிமையான தருணம்' என்று விவரித்த குடியரசுத் துணைத் தலைவர், இது குடும்பம், ஆசிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான, மறக்க முடியாத தருணம் என்று கூறினார்.
எளிமை மற்றும் வீரியத்தின் அடையாளமாக சுவாமி தயானந்த சரஸ்வதியின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெற்ற குடியரசுத் துணைத்தலைவர், சமூக சீர்திருத்தங்களை ஊக்குவிப்பதற்கும், வேத போதனைகளை மக்களுக்கு பரப்புவதற்கும் சுவாமிஜி தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று குறிப்பிட்டார்.
மாணவர்கள் எப்போதும் தங்கள் ஆசிரியர்களையும், தங்கள் நாட்டையும் மதிக்க வேண்டும் என்றும், தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். முதியோர் இல்லங்களின் அதிகரிப்பு குறித்து வருத்தம் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், நமது சமூகத்தில் குடும்பப் பிணைப்புகள் மற்றும் உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், நம் நாட்டில் முதியோர் இல்லங்கள் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.
மாணவர்கள் தங்கள் அந்தஸ்து, வசிப்பிடம், வாழ்க்கையில் எவ்வளவு பெயர், புகழ் மற்றும் செல்வம் சம்பாதித்திருந்தாலும், அவர்களின் பெற்றோர் மற்றும் பெரியவர்களை எப்போதும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
"நீங்கள் முதலில் இந்தியர்களாக இருக்க வேண்டும், கடைசியிலும் இந்தியர்களே இருக்க வேண்டும், இந்தியர்களைத் தவிர வேறு யாராகவும் இருக்கக் கூடாது" என்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வார்த்தைகளை இளைய தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார்
"பலவீனமான ஐந்து" பொருளாதாரங்களில் இருந்து உலகளவில் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறியதை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். இந்த பத்து ஆண்டுகளின் இறுதிக்குள், ஜப்பான், ஜெர்மனி இரண்டையும் பின்னுக்குத் தள்ளி, இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இடத்தைப் பெறும் என்ற கணிப்பை அவர் எடுத்துரைத்தார்.
***
ANU/PKV/IR/AG/KPG
(Release ID: 1990466)
Visitor Counter : 100