உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-ல் சிறுதானிய (ஸ்ரீ அன்னா) பெருவிழாக்களின் விவரங்கள்

Posted On: 19 DEC 2023 3:54PM by PIB Chennai

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-ன் ஒரு பகுதியாக, உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 27 மாவட்டங்களில் தொடர்ச்சியான சிறுதானிய (ஸ்ரீ அன்னா) பெருவிழாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. புதுதில்லி பிரகதி மைதானத்தில் 2023 நவம்பர் 3-5 வரை ஏற்பாடு செய்யப்பட்ட உலக உணவு இந்தியா 2023-ல் ஸ்ரீ அன்னா கவனம் செலுத்திய பகுதிகளில் ஒன்றாகும்.

மத்திய உணவுத் துறை அமைச்சகம் தனது திட்டங்கள் மூலம் நாட்டில் உள்ள ஸ்ரீ அன்னா பதப்படுத்துதல், பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. 8 பெரிய நிறுவனங்கள் மற்றும் 22 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முன்மொழிவுகள் உட்பட 30 ஸ்ரீ அன்னா அடிப்படையிலான திட்டங்களுக்கு ரூ.800 கோடி மதிப்பீட்டில் உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் உதவி பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1745 கடன்கள் பிரதமரின் தனிப்பட்ட ஸ்ரீ அன்னா பதப்படுத்தும் அலகுகளுக்கு ரூ.90.80 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன.

சிறு தானிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் (பி.எம்.எஃப்.எம்.இ) திட்டத்தின் கீழ் ஸ்ரீ அன்னா தயாரிப்புகளை ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ஓ.டி.ஓ.பி) என்று மத்திய உணவு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. மேலும் ஸ்ரீ அன்னா தயாரிப்புகளுக்கான 3 சந்தைப்படுத்தல் மற்றும் பிராண்டிங் முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஸ்ரீ அன்னா செயலாக்கங்களைக் கொண்ட 10 மாநிலங்களில் 17 தொழில் காப்பக மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உலக உணவு இந்தியா 2023-ல் 1208 கண்காட்சியாளர்கள், 7 அமைச்சர்கள் பிரதிநிதிகள் உட்பட 14 சர்வதேச பிரதிநிதிகள், 715 வெளிநாட்டு மற்றும் 218 உள்நாட்டு வாங்குவோர், 97 பெருநிறுவன தலைவர்கள், 10 மத்திய அமைச்சகங்கள் / துறைகள், 25 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் உட்பட பரந்த அளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலக உணவு இந்தியா 2023ன் போது அறிவிக்கப்பட்ட மொத்த முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ.33,129 கோடியாகும்.

தமிழ்நாட்டில் மதுரையில்  மார்ச் 6,7 ஆகிய நாட்களிலும், கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 19,20 ஆகிய நாட்களிலும் சிறுதானிய பெருவிழாக்கள் நடத்தப்பட்டன.

இத்தகவலை மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணையமைச்சர் திருமதி கே.எம்.ஷோபா கரண்ட்லஜே மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.


***

ANU/PKV/IR/RS/KPG
 


(Release ID: 1988376) Visitor Counter : 94


Read this release in: English , Urdu , Hindi