சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தேசிய தொழிற்நுட்பக் கழகம் புதுச்சேரி

Posted On: 18 DEC 2023 3:10PM by PIB Chennai

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகம் புதுச்சேரியில் இயந்திரவியல் துறை சார்பாக “பொறியாளர்களுக்கான மேம்பட்ட மாடலிங் மற்றும் உருவகப்படுத்துதல்கள்” என்ற தலைப்பில் ஐந்து நாள் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி கல்லூரி வளாகத்தில் இன்று (18.12.2023) காலை தொடங்கியது.

இந்நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர் முனைவர். ஜி. கீதா, துணை இயக்குனர், அறிவுசார் சொத்துக்கான மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை அவர்கள் கழகத்தின் இயக்குனர் (பொறுப்பு) முனைவர். உஷா நடேசன், கழகத்தின் பதிவாளர் முனைவர் சீ. சுந்தரவரதன் மற்றும் முனைவர். N M சிவராம், உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் (இயந்திரவியல் துறை) இவர்களின் முன்னிலையில் இணையவழி வாயிலாக தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய முனைவர். ஜி. கீதா அவர்கள் புதுமையான ஆராய்ச்சியின் முக்கியத்துவம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை பற்றிய விழிப்புணர்வின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய கழகத்தின் பதிவாளர் முனைவர் சீ. சுந்தரவரதன் அவர்கள் அறிவைப் பகிர்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, தேசிய தொழிற்நுட்பக் கழகம் புதுச்சேரியில் ஆண்டுதோறும் நிகழ்வுகளை நடத்தும் இயந்திர பொறியியல் துறைக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர், தொழில்துறைக்கும் கல்வித்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்குடன், முன்னணி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் அமர்வுகள் இப்பயிற்சிவகுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

இப்பயிற்சி வகுப்பில் ஐஐடிகள், என்ஐடிகள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னணி தொழில்துறைகளைச் சேர்ந்த நிபுணர்களால் விரிவுரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இப்பயிற்சி வகுப்பில் இந்தியா முழுவதிலுமிருந்து ஐஐடிகள், என்ஐடிகள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களிலிருந்து சுமார் 65க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இணையவழி வாயிலாக கலந்துகொண்டு பயிற்சிபெறவுள்ளனர்.

 இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தையும் முனைவர். நவீன் ராஜ் ஆர், உதவிப் பேராசிரியர் (இயந்திரவியல் துறை),                                 முனைவர். ஏ. கற்பகராஜ், உதவிப் பேராசிரியர் (இயந்திரவியல் துறை) மற்றும் முனைவர். சதீஷ் குமார் பி, உதவிப் பேராசிரியர் (இயந்திரவியல் துறை) இவர்கள் மூவரும் துறை உறுப்பினர்களின் உதவியோடு சிறப்பாக செய்திருந்தனர்.

***************

SMB/ KV 

  

 



(Release ID: 1987685) Visitor Counter : 59


Read this release in: English