சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

யானைகள் அதிகம் உள்ள 14 மாநிலங்களில் 33 யானை காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன

Posted On: 14 DEC 2023 3:28PM by PIB Chennai

யானைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும், மோதலைக் குறைப்பதற்கும் முக்கியமான யானைகளின் வாழ்விடங்கள், 'யானைகள் காப்பகம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே தலைமையிலான வழிகாட்டுதல் குழுவின் ஒப்புதலுடன் இந்த அறிவிக்கை செயல்படுத்தப்படுகிறது.

இதுவரை யானைகள் அதிகம் வாழும் 14 மாநிலங்களில் 33 யானைகள் காப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த யானை காப்பகங்கள், புலி காப்பகங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகளுடன் இணைந்து 1972-ம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.  இந்திய வனச்சட்டம், 1927 மற்றும் பிற உள்ளூர் மாநில சட்டங்கள். உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தற்போதுள்ள சட்டங்கள், விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி ஒழுங்குபடுத்தப்படுகின்றன. கர்நாடகா உட்பட யானை வழித்தடங்கள், யானை சரணாலயங்கள் மற்றும் யானைத் தாக்குதலால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் தலமலை- சாம்ராஜ் நகர் (தாளவாடி- முதஹள்ளி இடையே யானை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் நீலாம்பூர் கோவிலகம்-புதிய அமரம்பலம் இடையே யானை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.  இதுதவிர தமிழ்நாட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர்- சப்தூர் உட்பட 18 இடங்களில் யானை வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி, கோயம்புத்தூர், ஆனமலை, அகத்தியர் மலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் யானை காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் யானைகள் தாக்கியதால் 2020-2021-ல் 57 பேரும், 2021-2022-ல் 37 பேரும், 2022-2023-ல் 43 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இன்று மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த தகவலை தெரிவித்தார்.

 

***

ANU/PKV/SMB/AG/KPG



(Release ID: 1986333) Visitor Counter : 182


Read this release in: English , Urdu