சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மெட்ரிக் படிப்புக்கு முன் மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகைகள்

Posted On: 12 DEC 2023 4:25PM by PIB Chennai

தாழ்த்தப்பட்டோருக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மொத்த பயனாளிகளின் விவரம் பின்வருமாறு:

நிதியாண்டு

ஆதிதிராவிடர் மற்றும் பிறருக்கான மெட்ரிக் கல்வி உதவித் தொகைத் திட்டம்

ஆதிதிராவிட மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்

ஒதுக்கப்பட்ட நிதி (கோடியில்)

பயனாளிகள்

(லட்சங்களில்)

ஒதுக்கப்பட்ட நிதி (கோடியில்)

பயனாளிகள்

(லட்சங்களில்)

2020-21

599.71

29.15

4008.60

62.87

2021-22

570.18

38.11

1930.38

30.25

2022-23

207.93

11.34

4392.50

46.41

2022-23ஆம் நிதியாண்டு முதல், ஆதார் அடிப்படையிலான கட்டண முறை மூலம் பயனாளியின் கணக்கில் நேரடியாக மத்திய அரசின் பங்கு மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் ஆன்லைன் செயலாக்க அமைப்பு பின்வரும் அம்சங்கள் காரணமாக மேற்கொள்ளப்படுகிறது:-

(i) இடைத்தரகர் தலையீடு இல்லாமல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசின் பங்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.

2. கல்வி உதவித் தொகை வழங்கும் காலம் கணிசமாகக் குறைந்துள்ளது.

(iii.) நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுகிறது குறைபாடு 1% க்கும் குறைவாக உள்ளது, இதன் விளைவாக மாணவர்களிடையே அதிருப்தி குறைந்துள்ளது.

இத்தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் நாராயணசாமி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

***

ANU/SM/BS/RR/KPG




(Release ID: 1985559) Visitor Counter : 269


Read this release in: English , Urdu , Hindi