மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன் தீவன உற்பத்தி
மீன்வளத் துறை 586.12 கோடி மதிப்பிலான 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
12 DEC 2023 1:36PM by PIB Chennai
இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம், உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிப்பதற்காகவும், வெளிநாட்டு கப்பல் கட்டும் தளங்களுடன் சமமான களத்தை வழங்குவதற்காகவும், 09.12.2015 அன்று இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கான கப்பல் கட்டும் நிதி உதவிக் கொள்கைக்கு (எஸ்பிஎஃப்ஏபி) 10 ஆண்டுகளுக்கு (01.04.2016 முதல் 31.03.2016 வரை பெறப்பட்ட ஒப்பந்தங்கள்) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கு "ஒப்பந்த விலை" அல்லது "நியாயமான விலை" அல்லது "பெறப்பட்ட உண்மையான பரிவர்த்தனைகள்" ஆகியவற்றில் 20%க்கு சமமான நிதி உதவி குறைந்தபட்சம் 10 ஆண்டு காலத்திற்கு வழங்கப்படுகிறது. மேலும், பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜனா திட்டத்தின் கீழ், 2020-21 நிதியாண்டு முதல் 2022-23 மற்றும் நடப்பு 2023-24 ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.555.60 கோடி முதலீட்டில் பாரம்பரிய மீனவர்களுக்காக 463 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை நிறுவ மத்திய அரசின் மீன்வளத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கப்பல் கட்டும் தளங்களிலிருந்து ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வாங்குவதற்கு வசதியாக, இந்திய அரசின் மீன்வளத் துறை கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஒரு நிலையான இயக்க நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
மத்திய அரசின் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, மீன் வளர்ப்பிற்காக மீன் பண்ணையாளர்களுக்கு தரமான தீவனம் வழங்குவதையும், தீவனத் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு பல்வேறு திட்டங்களின் கீழ் உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுவரை மீன்வளத் துறை 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு மொத்தம் 586.12 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய அரசின் நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ் மொத்தம் 51.99 கோடி செலவில் 229 அலகுகளும் அடங்கும். மேலும், மீன் தீவனம் போன்ற நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான தீவனங்கள் உட்பட ஒரு வலுவான தரமான சூழல் அமைப்பின் தேவையை உணர்ந்த மீன்வளத் துறை, இந்தியத் தர நிர்ணய ஆணையத்துடன் இணைந்து செயல்பட ஒரு தரப்படுத்தல் பிரிவை அமைத்துள்ளது.
இத்தகவலை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/SMB/BS/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1985489)
வருகையாளர் எண்ணிக்கை : 115