வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளிக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக 3000-க்கும் மேற்பட்ட வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், 400 சுய உதவிக் குழுக்கள், குறுந்தொழில் முனைவோர் மற்றும் சமூகத் துறை நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன
Posted On:
08 DEC 2023 5:29PM by PIB Chennai
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளிக் கட்டமைப்பு தற்போது 2.3 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களைக் கொண்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு நேரடியாக எந்த விற்பனையாளர்களையும் இணைக்காது. தயாரிப்புகள், சேவைகள் ஆகிய இரண்டையும் கட்டமைப்பு மூலம் பரிவர்த்தனை செய்ய டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளிக் கட்டமைப்பு உதவுகிறது.
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளிக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக 3000-க்கும் மேற்பட்ட வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், 400 சுய உதவிக் குழுக்கள், குறுந்தொழில் முனைவோர் மற்றும் சமூகத் துறை நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
தற்போதுள்ள விற்பனையாளர் பயன்பாடுகள் மூலம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைக் கட்டமைப்புடன் இணைக்கக் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் அமைச்சகத்துடன் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளிக் கட்டமைப்பு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது, மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைக் கொண்ட சந்தையை டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளிக் கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கவும் செயல்பட்டு வருகிறது.
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளிக் கட்டமைப்பு இந்திய தேசிய உணவக சங்கம், இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கங்களின் கூட்டமைப்பு போன்ற தொழில் சங்கங்களுடன் இணைந்து உணவகங்களைக் கட்டமைப்புடன் இணைக்கத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
இத்தகவலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு சோம் பிரகாஷ் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/SMB/IR/RS/KRS
(Release ID: 1984135)