சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

அனைவருக்கும் சுகாதாரம் பற்றிய புதிய தகவல்கள்

Posted On: 08 DEC 2023 4:45PM by PIB Chennai

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், மக்களுக்கு அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையிலான சுகாதார சேவைகளை வழங்குவதில் மாநில அரசுக்கு ஆதரவளிப்பதன் மூலம் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை நோக்கி அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு அணுகக்கூடிய, குறைந்த செலவில் தரமான சுகாதாரத்தை வழங்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்படுகிறது. தேசிய சுகாதார இயக்கம் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், சுகாதார வசதிகளில் போதுமான மனித வளம் கிடைப்பதற்கும், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை குழுக்களுக்கு தரமான சுகாதார சேவை கிடைப்பதை மேம்படுத்துவதற்கும் அணுகுவதற்கும் ஆதரவை வழங்குகிறது. பிரதமர்-ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் மற்றும் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள், பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்  ஆகிய நான்கு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

 ஆயுஷ்மான் ப இயக்கம் குடியரசுத்தலைவரால் 2023, செப்டம்பர் 13 அன்று தொடங்கப்பட்டது. ஆயுஷ்மான் ப இயக்கம் பிரதமரின் உறுதிப்பாட்டிற்கு இணங்க ஒவ்வொரு கிராமம் / நகரத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார சேவைகளை நிறைவு செய்வதற்கும், சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சுகாதார சேவைகளை அணுகுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.   28.11.2023 அன்று அறிவிக்கப்பட்டபடி பயனாளிக்கு ஆயுஷ்மான் ப இயக்கத்தில் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில் 3,80,680 ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 13,276 ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5.00 லட்சம் வரை சுகாதாரப் பாதுகாப்பை வழங்குகிறது. தேசிய சுகாதாரக் கொள்கையின் கீழ், மகப்பேறு இறப்பு விகிதம் (எம்.எம்.ஆர்) / சிசு இறப்பு விகிதம் (ஐ.எம்.ஆர்) மற்றும் மொத்த கருவுறுதல் விகிதம் ஆகியவற்றின் தற்போதைய சாதனைகள் பின்வருமாறு:

பேறுகால இறப்பு விகிதம் 97

குழந்தைகள் இறப்பு விகிதம் 28

மொத்த கருவுறுதல் விகிதம் 2 ஆகும்.

ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை தற்போதுள்ள துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை மாற்றியமைத்தல், சுகாதார மனித வளத்தை ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்துவதற்கான ஆதரவு, தேசிய ஆம்புலன்ஸ் சேவைகள், நடமாடும் மருத்துவப் பிரிவுகள், ஆஷா, உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், 24 மணி நேரமும் செயல்படும் சேவைகள் மற்றும் முதலுதவி வசதிகள் ஆகியவை மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சுகாதாரத் திட்டங்களில் அடங்கும்.  

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

***

(Release ID:1984041)

ANU/SMB/PKV/AG/KRS(Release ID: 1984119) Visitor Counter : 76


Read this release in: Telugu , English