ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024, பிப்ரவரி 26 முதல் 29 வரை பாரத் டெக்ஸ் 2024 என்ற உலக மகா ஜவுளி நிகழ்வுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது

प्रविष्टि तिथि: 08 DEC 2023 3:57PM by PIB Chennai

பாரத் டெக்ஸ் 2024 என்பது 11 ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களின் கூட்டமைப்பு மற்றும் ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்படும் உலக மகா ஜவுளி நிகழ்வாகும். இதை 2024 பிப்ரவரி 26 முதல் 29 வரை புதுதில்லியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இது நிலைத்தன்மை, மறுசுழற்சி குறித்த சிறப்பு அரங்குகள், நெகிழ்வான உலகளாவிய விநியோக அமைப்புகள், டிஜிட்டல்மயமாக்கல் குறித்த கருப்பொருள் விவாதங்கள், கைவினைஞர்களின் தயாரிப்பு செயல்விளக்கங்கள், சர்வதேச வடிவமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டிருக்கும். சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தரைத்தளம், இழைகள், நூல், துணிகள், தரைவிரிப்புகள், கம்பளங்கள், பட்டு, ஜவுளி சார்ந்த கைவினைப் பொருட்கள், தொழில்நுட்ப ஜவுளிகள் மற்றும் பல கண்காட்சிகள் நடைபெற உள்ளன. இது சுமார் 50 அமர்வுகளைக் கொண்டிருக்கும்.

இத்தகவலை மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

ANU/SMB/IR/RS/KRS


(रिलीज़ आईडी: 1984108) आगंतुक पटल : 162
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu