சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இந்திய சட்டத்தில் மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வார்த்தைகள்: தலைமை ஆணையர் தாமாக முன்வந்து நடவடிக்கை
Posted On:
08 DEC 2023 12:41PM by PIB Chennai
21.11.2023 தேதியிட்ட "தி இந்து" நாளிதழில் (சென்னை பதிப்பு) வெளியான செய்தியில், 'ஆட்டிஸம் உள்ளவருக்கு 'மனநலம் பாதித்தோர் கணக்கை' அஞ்சலகம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.’ என்று கூறப்பட்டிருப்பதை அடுத்து, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016 பிரிவு 75-ன் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான தலைமை ஆணையரின் நீதிமன்றம் இதனைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
தொலைத்தொடர்பு குடும்ப ஓய்வூதியரான முதியவர் ஒருவர் தனது மகன் பெயரில் சேமிப்புக் கணக்கு மற்றும் டெர்ம் டெபாசிட் கணக்குத் தொடங்க சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள ஜி.கே.எம் போஸ்டல் காலனி தபால் அலுவலகத்தை அணுகினார். தனது மகனின் தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை மற்றும் தேசிய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பாதுகாவலர் சான்றிதழை சமர்ப்பித்து, பாதுகாவலரால் இயக்கப்படும் கணக்கைத் தொடங்குமாறு அவர் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு, கணக்கு தொடங்கப்பட்டது. ஆனால் காலனித்துவ காலச் சட்டம், அரசு சேமிப்பு வங்கிச் சட்டம், 1873 இன் பிரிவு 12 ஐ மேற்கோள் காட்டி, அஞ்சல் துறை கணக்கை "மனநலம் பாதித்தோருக்கான கணக்கு" என்று வகைப்படுத்தும் உணர்வுபூர்வமற்ற நடைமுறையைத் தொடர்ந்தது.
மாற்றுத் திறனாளிகள் தங்கள் நிதி விவகாரங்களைக் கட்டுப்படுத்த மற்றவர்களுடன் சமமாக உரிமைகளைக் கொண்டிருப்பதையும், வங்கிக் கடன்கள் மற்றும் பிற வகையான நிதிக் கடன்களை அணுகுவதையும் சட்டப்பூர்வ திறனை அனுபவிப்பதையும் பொருத்தமான அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ஆர்.பி.டபிள்யூ.டி சட்டத்தின் பிரிவு 13 கூறுகிறது. இச்சட்டத்தின் பிரிவு மற்றும் முகவுரை ஊனமுற்ற நபர்களின் தன்னாட்சி, கண்ணியம் மற்றும் தனியுரிமை ஆகியவை மதிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
ஐ.நா. ஊனமுற்றோர் சேர்க்கை உத்தியின் ஒரு பகுதியாக 2019 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்ட இயலாமை உள்ளடக்கிய வழிகாட்டுதல்களையும் அந்த அறிவிப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு சொற்களை பட்டியலிட்டுள்ளது. அவை தவிர்க்கப்பட வேண்டும். அத்தகைய சொற்கள் ஐ.நா பரிந்துரைத்த தொடர்புடைய சொற்களுடன் மாற்றப்பட்டுள்ளது. ஐ.நா.வின் கொள்கையானது அடுத்த தசாப்தத்திற்கு ஊனமுற்றோர் சேர்க்கை குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான மிக உயர்ந்த அளவிலான அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான 2030 செயல் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒரு நிறுவனக் கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
ANU/SMB/PKV/AG/KV
(Release ID: 1983961)
Visitor Counter : 106