உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

60 விமான வழித்தடங்களில் கட்டணங்களை ஆய்வு செய்யும் கட்டணக் கண்காணிப்புப் பிரிவு உள்ளது: மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா

இடுகை இடப்பட்ட நாள்: 07 DEC 2023 4:57PM by PIB Chennai

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 60 வழித்தடங்களில் கட்டணங்களை ஆய்வு செய்யும் கட்டணக் கண்காணிப்புப் பிரிவைக் கொண்டுள்ளது. கட்டணக் கண்காணிப்பு பிரிவு திட்டமிட்ட விமானத்திற்கு 30 நாட்கள், 15 நாட்கள், 7 நாட்கள், 3 நாட்கள், 2 நாட்கள் மற்றும் 1 நாள் முன்னதாகக்  கட்டணங்களைக் கண்காணிக்கிறது.

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை பல்வேறு காலங்களின் தாக்கங்களைக் கொண்ட துறையாகும். எனவே கட்டணங்கள் மாறுபடும். அக்டோபர் முதல் ஜனவரி வரை பண்டிகைக் காலத்தில் அதிகப் போக்குவரத்து இருக்கும். அதன் பிறகு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிகக் குறைந்த போக்குவரத்து இருக்கும். பின்னர் ஜூன் மாதம் வரை அதிகப் போக்குவரத்து இருக்கும். இது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய அம்சமாக உள்ளது.

முன்கூட்டியே முன்பதிவு செய்தால், அதிகக் கட்டணம் இருக்காது. ஆனால் கடைசி நேரத்தில் முன்பதிவு செய்தால், கட்டணம் உயரக் கூடும்.

கடந்த 3 ஆண்டுகளில், அனைத்து விமான நிறுவனங்களும் சேர்ந்து ஆண்டுக்கு ரூ. 55,000 கோடி முதல் ரூ. 1,32,000 கோடி வரை இழப்பை சந்தித்துள்ளன. கொவிட் பாதிப்பு, விமான நிறுவனங்களின் நிதி நிலைத்தன்மையை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளது. அந்தச் சூழலிலும், விமான நிறுவனங்கள் மிகவும் நிலையான அடிப்படையில் செயல்படுகின்றன. விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவில் விமான எரிபொருளுக்காக 40 சதவீதம் செலவாகிறது. 

இந்தத் தகவலை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

******

ANU/SMB/PLM /AD/KV


(வெளியீட்டு அடையாள எண்: 1983943) வருகையாளர் எண்ணிக்கை : 102
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी