பாதுகாப்பு அமைச்சகம்
புதுதில்லியில் நடைபெறும் ஒருங்கிணைந்த தலைமைத்துவ மாநாட்டின் முதல் அமர்வில் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் முப்படைகளின் தளபதி கலந்துரையாடினார்
प्रविष्टि तिथि:
06 DEC 2023 5:02PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெறும் ஒருங்கிணைந்த தலைமைத்துவ மாநாட்டின் முதல் அமர்வுக்கு முப்படைகளின் தளபதி திரு அனில் செளஹான் தலைமை வகித்தார். இன்று (டிசம்பர் 06, 2023) இந்த மாநாட்டின்போது அவர் ஆயுதப்படைகளின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த மாநாட்டில் புவிசார் பிரச்சினைகள், தேசியப் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து, வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்கள், திறன் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள், பாதுகாப்புத் துறையில் தற்சார்பு போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்படுகின்றன.
இந்த மூன்று நாள் மாநாட்டின்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து அந்தந்த துறைகளில் அனுபவம் கொண்ட முக்கியப் பிரமுகர்கள், பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடுவார்கள். முப்படைகளின் மூத்த அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக்கான ஒரு தளமாக இந்த மாநாடு அமையும்.
****
(Release ID: 1983158)
(रिलीज़ आईडी: 1983374)
आगंतुक पटल : 113