அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட திரவமாக்கல் அம்சங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பழைய நிலநடுக்க ஆய்வுகள் நிலநடுக்க வரலாற்றைக் கண்டறிந்து எதிர்காலத்திற்குத் தயாராக முடியும்

Posted On: 06 DEC 2023 12:14PM by PIB Chennai

1869 மற்றும் 1943 ஆம் ஆண்டுகளில் பெரிய நிலநடுக்கங்கள் நேரிட்டதாக  அறியப்படும் கோப்பிலி ஃபால்ட் (கே.எஃப்) மண்டலம் என்று அழைக்கப்படும் வடகிழக்கு பிராந்தியத்தில் செயலில் உள்ள குறைபாட்டில் பல மணல் திட்டுகள்  மற்றும் மணல் சில்லுகள் போன்ற நில அதிர்வு திரவமாக்கல் அம்சங்கள் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நிலநடுக்கங்களின் வரலாற்றைக் கண்டறிந்து புரிந்து கொள்ளவும், எதிர்காலத்திற்குத் தயாராகவும் பழைய நிலநடுக்கங்கள் குறித்த ஆய்வுகள் உதவும் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 

கடந்த காலங்களில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கங்களின், வரலாற்று ரீதியிலான அல்லது கருவி பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. புவியியல், புவிவடிவயியல், நதிகளின் தடங்கள் கதிரியக்க கார்பன் கால அளவிடுதல் ஆகியவற்றின் வடிவத்தில் அடையாளம் காண முடியும்.

இது பிராந்தியத்தில் பெரிய, முக்கியமான நிலநடுக்கங்கள் மீண்டும் நிகழும் காலத்தின் மிக முக்கியமான அம்சத்தை கண்டைய உதவும். அதிகரித்த துளை நீர் அழுத்தம் காரணமாக ஒரு துகள் திண்மத்திலிருந்து திரவ நிலைக்கு மாறுவது அல்லது திரவமாக்கல் நிலநடுக்கங்களின் முக்கியமான இரண்டாம் நிலை ஆதாரமாகும்.

இது பெரும்பாலும் மென்மையான வண்டல் படிமங்களில் குறிப்பாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மணல் மற்றும் வண்டல் அல்லது களிமண்ணில் நிகழ்கிறது. மணல் அடுக்குகள், மணல் அடிகள், மணல் வரிகள், வளைந்த படுகை, மற்றும் பல திரவமாக்கலின் விளைவாக ஏற்படும் கட்டமைப்புகள் இதில் அடங்கும்.

பெரிய நிலநடுக்கங்களைத் தாங்கும் வகையில் பாலங்கள் மற்றும் பெரிய கட்டிடங்களை எதிர்காலத்தில் வடிவமைப்பதற்கு இது முக்கியமானது.

கோப்பிலி ஃபால்ட்  (கே.எஃப்) மண்டலத்தில் எதிர்கால நிலநடுக்க நிகழ்வுகளைத் தணிக்க, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான இந்திய புவிகாந்தவியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கே.எஃப் அருகே உள்ள கோலாங் ஆற்றின் வெள்ளச் சமவெளி இருப்புகளில் மூன்று அகழி தளங்களில் நிலநடுக்க  திரவமாக்கல் அம்சங்களை அடையாளம் கண்டனர். திரவமாக்கல் அம்சங்களில் பல மணல் திட்டுகள் மற்றும் மணல் சில்லுகள் ஆகியவை அடங்கும், மேலும் அவை கடந்தகால நிலநடுக்க  செயல்பாட்டின் போது தூண்டப்பட்ட நிறைவுற்ற வண்டல் திரவமாக்கலுக்கு நேரடி எதிர்வினையாகும்.

ஓ.எஸ்.எல் கால வரையறை கடந்த 480 ஆண்டுகளில் கே.எஃப் அருகே இரண்டு நிலநடுக்கங்களால் தூண்டப்பட்ட திரவமாக்கலைக் குறிக்கின்றன. இந்த விவரங்கள் குறைபாடுகள் மற்றும் உள் அடுக்கு நில அதிர்வுகளின் நீண்டகால சிதைவு வரலாற்றை விளக்க உதவும்.

*******

ANU/SMB/BS/KV



(Release ID: 1983173) Visitor Counter : 69


Read this release in: English , Urdu , Hindi