சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில் நுட்பக் கழகமும் அந்தமான் நிகோபார் தீவுகளில் சுபாஷ் சந்திர போஸ் உயர்கல்வி நிறுவனங்களின் கீழ் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழில்நுட்ப நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

प्रविष्टि तिथि: 02 DEC 2023 5:08PM by PIB Chennai

காரைக்காலில் உள்ள புதுச்சேரி  தேசிய  தொழில்  நுட்பக்   கழகமும் அந்தமான் நிகோபார் தீவுகளில் சுபாஷ்  சந்திர  போஸ்  உயர்கல்வி நிறுவனங்களின் கீழ் உள்ள டாக்டர். பி.ஆர்.  அம்பேத்கர்   தொழில்நுட்ப நிறுவனமும்   30-11-2023 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டன.

இந்த  புரிந்துணர்வு  ஒப்பந்தம், கல்வி ஆர்வத்தை மேம்படுத்தவும், பாடத்திட்ட திருத்தத்தை மேற்கொள்ளவும், புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல், நேதாஜி  சுபாஷ்  சந்திர போஸ்  உயர் கல்வி நிறுவனத்தின் கீழ் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு  செய்தல்  போன்றவற்றுக்காக கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஆராய்ச்சித்  திட்டங்கள்  தொடர்பாக  தகவல் பரிமாற்றம், போர்ட் பிளேயரில் உள்ள டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சிகளை அளித்தல் போன்றவற்றுக்காகவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் காரைக்காலில் உள்ள  புதுச்சேரி தொழில்நுட்பக்  கழகத்தின்  பொறுப்பு  இயக்குநர் முனைவர்    உஷா நடேசன் மற்றும் டாக்டர். பி ஆர்  அம்பேத்கர்  தொழில்நுட்ப நிறுவனத்தின்  முதல்வர் முனைவர்   உத்பால்   சர்மாவும்   கையெழுத்திட்டனர்.

***

AD/PLM/DL


(रिलीज़ आईडी: 1981903) आगंतुक पटल : 65
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English