நிதி அமைச்சகம்

2023-24-ம் நிதியாண்டில் 2023 அக்டோபர் வரையிலான மத்திய அரசு கணக்குகளின் மாதாந்திர ஆய்வு அறிக்கைகள் வெளியீடு

Posted On: 30 NOV 2023 4:51PM by PIB Chennai

2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான மத்திய அரசின் மாதாந்திர கணக்கு ஒருங்கிணைக்கப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

அதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:-

2023 அக்டோபர் வரை மத்திய அரசு ரூ.15,90,712 கோடி (மொத்த வரவுகளில் 58.6%) வருவாய் பெற்றுள்ளது, இதில் ரூ.13,01,957 கோடி வரி வருவாய் (மத்திய அரசுக்கு நிகரமாக), ரூ.2,65,765 கோடி வரி அல்லாத வருவாய் மற்றும் ரூ .22,990 கோடி கடன் அல்லாத மூலதன வரவு அடங்கியுள்ளது. கடன்களை வசூலித்ததன் மூலம் கடன் அல்லாத மூலதன வரவுகள் ரூ.14,990 கோடியும்  பல்வகை மூலதன வரவுகள் ரூ.8,000 கோடியும் இதில் அடங்கும்.

இக்கால கட்டத்தில் மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வாக ரூ.5,28,405 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது கடந்த நிதியாண்டின்  இதே காலகட்டத்தை  விட ரூ.93,966 கோடி அதிகமாகும்.

மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.23,94,412 கோடியாகும். இதில் ரூ.18,47,488 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.5,46,924 கோடி மூலதனக் கணக்கிலும் உள்ளது. மொத்த வருவாய் செலவினங்களில், 5,45,086 கோடி ரூபாய் வட்டி செலுத்துவதற்காகவும், 2,31,694 கோடி ரூபாய் முக்கிய மானியங்களுக்காகவும் அளிக்கப்பட்டுள்ளது.

*********

(Release ID: 1981160)

ANU/SMB/IR/RR/KRS



(Release ID: 1981342) Visitor Counter : 53


Read this release in: English , Urdu , Hindi