மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கான உரிமைகள் இணையத்தில் மிக முக்கியமானவை: மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்
प्रविष्टि तिथि:
29 NOV 2023 6:26PM by PIB Chennai
இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான உச்சி மாநாட்டின் இரண்டு அமர்வுகளில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் இன்று பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொழில்நுட்ப கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளை இந்தியா முறையாக வகுத்து செயல்படுவதாக கூறினார். நாட்டில் வளர்ந்து வரும் புத்தொழில் நிறுவனங்கள் சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் அரசு தீவிர அக்கறை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் அதற்கு நிதியுதவி அளித்தல், டிஜிட்டல் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் கட்டமைப்பில் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறிய அவர், இதில் இந்தியா உறுதியுடன் செயல்பட்டு வருவதாக கூறினார்.
செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வமான முறையில் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும், அது டிஜிட்டல் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் நன்மைகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவை 'புதிய இந்தியா'வாக மாற்றி வளர்ந்த நாடு என்ற நிலைக்கு உயர்த்த பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருவதாக திரு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
***
ANU/AD/PLM/AG/KRS
(रिलीज़ आईडी: 1980945)
आगंतुक पटल : 154