மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
கோவையில் நடைபெறும் "ஈஷா இன்சைட் - வெற்றியின் டி.என்.ஏ" நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்கிறார்
Posted On:
22 NOV 2023 12:28PM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், கோவையில் வியாழனன்று நடைபெறும் 12-வது "ஈஷா இன்சைட் - வெற்றியின் டி.என்.ஏ" நிகழ்வில் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில், சத்குரு ஜக்கி வாசுதேவுடன் மனந்திறந்த உரையாடலை அமைச்சர் நடத்துவார். வணிகங்களை எவ்வாறு அதிகரிப்பது, ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவான சூழலை வளர்ப்பது மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் பங்களிப்பது குறித்து விவாதிப்பார்.
இந்த நிகழ்வின் கருப்பொருளுடன் இணைந்து, 2014 முதல் தொழில்முனைவோருக்கு ஆதரவான சூழல் அமைப்பை உருவாக்குவதில் இந்தியாவின் பயணம் குறித்து அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் பேசுவார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், இளம் இந்தியர்களும் தங்களுக்கு தனித்துவமான பாதைகளை எவ்வாறு உருவாக்கிக் கொள்கிறார்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட மகத்தான வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது குறித்தும் அமைச்சர் பேசுவார். தொழில்நுட்பத் துறையில் அனுபவம் பெற்ற மூத்தவர், இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் சிப் வடிவமைப்பாளர் மற்றும் பிபிஎல் மொபைலின் நிறுவனர் என்ற முறையில், ஒரு தொழில்முனைவோராக தனது அனுபவத்தை வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் அமைச்சர் பகிர்ந்து கொள்வார். ஒரு தொழில்நுட்ப தொழில்முனைவோராக, திரு ராஜீவ் சந்திரசேகர் தமிழ்நாட்டின் முதல் மற்றும் மிகப்பெரிய வயர்லெஸ் நெட்வொர்க்கை நிறுவினார். இந்தியாவின் தொழில்நுட்பக் கொள்கைகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்தும் அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தனது அனுபவத்திலிருந்து எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார்.
"இன்சைட்: தி டி.என்.ஏ ஆஃப் சக்சஸ்" என்பது தலைமை நிர்வாக அதிகாரிகள் / சிஎக்ஸ்ஓக்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான நான்கு நாள் வணிக தலைமைத்துவ நிகழ்வாகும், இது ஒருவரின் வணிகத்தை அளவிடுவதற்கான அறிவியலைக் கண்டறிகிறது.
***
ANU/PKV/SMB/AG/KPG
(Release ID: 1978727)
Visitor Counter : 135