பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியக் கடற்படை பெருங்கடல் பாய்மரப் படகுப் போட்டி 2023

Posted On: 18 NOV 2023 11:20AM by PIB Chennai

இந்தியக் கடற்படை  பெருங்கடல் பாய்மரப் பயணத்தில் முன்னணியில் உள்ளது. கடல் சாகசத்தை ஊக்குவிக்கும் வகையில், புதுதில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படை பாய்மரப் படகு சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தியக் கடற்படை கொச்சியில் இருந்து கோவாவுக்கு நவம்பர் 22 முதல் 26 வரை கமாண்ட்களுக்கு இடையேயான பாய்மரப் படகுப் போட்டி நடத்தத்  திட்டமிடப்பட்டுள்ளது.

புல்புல், நீல்கண்ட், கடல்புரா, ஹரியால் ஆகிய 40 அடி நீளமுள்ள இந்தியக் கடற்படை பாய்மரப் படகுகள் (ஐ.என்.எஸ்.வி) இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன. இவை கொச்சி கடற்படை தளத்தில் இருந்து கோவா வரை சுமார் 360 நாட்டிக்கல் மைல் தூரத்தை சுமார் 5 நாட்களில் கடக்கும்.

இந்தப் பாய்மரப் படகுப்  பயணங்களுக்கான செலுத்துநர்கள் போதுமான  பாய்மரப் படகுப் பயண அனுபவம் கொண்ட தன்னார்வலர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.   பாய்மரப் படகுப் பயணம் மிகவும் கடினமான சாகச விளையாட்டாகும். இந்தியக் கடற்படை சாகச உணர்வை வளர்ப்பதற்கும், பணியாளர்களின் பேரிடர் மேலாண்மைத் திறன்களை மேம்படுத்துவதற்கும் பாய்மரப் படகுகளைப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் அதன் அத்தியாவசிய கடல் திறன் மற்றும் இயந்திர மேலாண்மைத் திறன்களையும் மேம்படுத்துகிறது.

 

நான்கு ஐ.என்.எஸ்.வி.-களில், எட்டுப் பெண் அதிகாரிகள், அக்னிவீரர்கள் உட்பட, 32 பேர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஐ.என்.எஸ்.வி.-யிலும் கடற்படையின் மூன்று கமாண்ட்களிலிருந்து எட்டு வீரர்கள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார்  கமாண்ட் மற்றும் என்.எச்.க்யூவின் ஒருங்கிணைந்த குழு இருக்கும். மூத்த பங்கேற்பாளரான ஒரு கமாடோர் மற்றும் இளம் அக்னிவீரர் நிலையில் உள்ளவர் இடம் பெறுவர்.

இந்த சிறிய கப்பல்களில் பயணம் செய்வதே, தனது பணியாளர்களிடையே "வரம்பற்ற  கடல் உணர்வு" மற்றும் இயற்கையின் கூறுகளை மதிக்கும் சிறந்த வழி என்று இந்தியக் கடற்படை நம்புகிறது. இது பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான கடல் பயணத்திலிருந்து பிரிக்க முடியாதவை. வளரும் கடற்படை வீரர்களுக்கு துணிவு, தோழமை, சகிப்புத்தன்மை, ஒரு குழுவின் உறுப்பினர்களிடம் இருக்கும் பொதுவான மனப்பான்மை, உற்சாகம், குழுவின் வலுவான மரியாதை ஆகியவற்றை ஊக்குவிக்கவும் அவை உதவுகின்றன.

*****

ANU/SMB/BS//DL



(Release ID: 1977803) Visitor Counter : 119


Read this release in: English , Urdu , Marathi , Hindi