கலாசாரத்துறை அமைச்சகம்
ஓவியர் கருணா ஜெயின் வரைந்த ஓவியங்களின் தனிக் கலைக் கண்காட்சியை மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி பார்வையிட்டார்
Posted On:
16 NOV 2023 3:09PM by PIB Chennai
ஓவியர் கருணா ஜெயின் வரைந்த ஓவியங்களின் தனிக் கலைக் கண்காட்சியை மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி பார்வையிட்டார். பல்வேறு கருப்பொருள்களைக் கொண்ட ஓவியங்களுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
புதுதில்லி, லோதி சாலையில் உள்ள இந்தியா ஹாபிடட் சென்டரில் உள்ள கன்வென்ஷன் ஹால் அரங்கில் நவம்பர் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது
கருணா ஜெயினின் கலைப்படைப்பு தெய்வீக இயற்கைக்கும் பெண்களுக்கும் இடையிலான ஆழமான மற்றும் அர்த்தமுள்ள தொடர்பை ஆராய்கிறது. அவரது ஓவியங்கள் பிரபஞ்சத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெண்கள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை அழகாக எடுத்துரைக்கின்றன. அதே நேரத்தில் வாழ்க்கையில் இருக்கும் உள்ளார்ந்த நேர்மறை அம்சங்களையும் எடுத்துக்காட்டுகின்றன.
பல்வேறு பிரபலமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கருணா ஜெயின், குழந்தைகளின் கல்வி தொடர்பான முன்முயற்சிகளை தீவிரமாக ஆதரிக்கிறார். பெண் கல்வியில் சிறப்பு கவனம் செலுத்துகிறார். ரத்த தான விழிப்புணர்வை ஊக்குவிப்பதும் அவரது முயற்சிகளில் அடங்கும்.
***
ANU/PKV/PLM/RS/KV
(Release ID: 1977405)