சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பழங்குடியினர் இந்தியா விற்பனை நிலையம் கோயம்புத்தூரில் திறக்கப்பட்டது
Posted On:
15 NOV 2023 7:14PM by PIB Chennai
'பகவான் பிர்சா முண்டா' பிறந்த தினத்தையொட்டி, பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள டிரைஃபெட் (இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனம்) கேரள மாநிலம் எர்ணாகுளம், கொச்சிக் கோட்டையில் ஆதி பஜார் தொடங்கப்படுவதையும், பழங்குடியினரை சமூக-பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கான பல்வேறு முன்முயற்சிகளையும் பெருமையுடன் அறிவிக்கிறது.
இது நாடு முழுவதிலுமிருந்து திறமையான பழங்குடி கைவினைஞர்களுக்கு அவர்களின் தனித்துவமான கைவினைத்திறனை வெளிப்படுத்துவதற்கும், அங்கீகரிப்பதற்கும் ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பிரத்யேக நிகழ்வாகும். பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனத்தின் அர்ப்பணிப்பு இந்த முயற்சியின் மூலம் தெளிவாகிறது.
நவம்பர் 15 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களால் 'பகவான்' என்று போற்றப்படும் 'சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா'வின் பிறந்த தினமாகும். பகவான் பிர்சா முண்டா ஒரு சிறந்த சுதந்திர போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் நாட்டின் மரியாதைக்குரிய பழங்குடியின தலைவர் ஆவார், அவர் பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தின் சுரண்டல் முறைக்கு எதிராக துணிச்சலுடன் போராடினார். பழங்குடியின இயக்கத்திற்கு தலைமையேற்று 'உல்குலான்' (புரட்சி)- க்கு அழைப்பு விடுத்து, ஒருங்கிணைத்து வழிநடத்தினார். பழங்குடிகள் தங்கள் கலாச்சார அம்சங்களைப் புரிந்துகொண்டு ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார். நவம்பர் 15 ஆம் தேதியை அனைத்து துணிச்சலான பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக 'பழங்குடியினர் கௌரவ தினம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் 15 ஆம் தேதி ''பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு, கொச்சி கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தின் புனித ஆண்ட்ரூ அரங்கில் நவம்பர் 15 முதல் 21 வரை, காலை 09.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை ஆதி பஜார் நடைபெறும். பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பழங்குடி மக்கள் தங்கள் அசாதாரண கலைத்திறன், தனித்துவமான பாரம்பரியங்கள் மற்றும் அவர்களின் மாறுபட்ட தயாரிப்புகள் மூலம் குறிப்பிடத்தக்க திறன்களை வெளிப்படுத்த அழைக்கப்படுகிறார்கள், இந்த நிகழ்வு கைவினைஞர்கள் மற்றும் இப்பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு நிலையான ஆதரவு, சந்தை அணுகல் மற்றும் வாய்ப்புகளை கண்காட்சி மூலம் எளிதாக்கும்.
ஆதி பஜார் நிகழ்வில் கையால் நெய்யப்பட்ட ஆடைகள், நுணுக்கமான வேலைப்பாடு கொண்ட நகைகள், உன்னதமான மரவேலைகள், நேர்த்தியான மண்பாண்டங்கள் மற்றும் அழகான ஓவியங்கள் உள்ளிட்ட பழங்குடி கலை வடிவங்கள் காட்சிப்படுத்தப்படும். ஒவ்வொரு தலைசிறந்த படைப்பும் பழங்குடிகளின் தனித்துவமான அடையாளத்தையும் கலாச்சார அமைப்பையும் பிரதிபலிக்கிறது, கலை ஆர்வத்தின் வசீகரமான கதைகளை விவரிக்கிறது. கேரளாவின் கொச்சியில் உள்ள பழங்குடி ஆதி பஜார் பழங்குடி கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனத்தின் இன்றியமையாத அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. மிகவும் திறமையான பழங்குடி கைவினைஞர்கள் தங்கள் ஈடு இணையற்ற கைவினைத்திறனை வெளிப்படுத்த இந்த அசாதாரண வாய்ப்பை ஏற்றுக்கொள்ள இது ஊக்குவிக்கிறது.
இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனத்தின் தெற்கு மண்டல அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, இரண்டு தனித்துவமான பழங்குடியின இந்திய விற்பனையகம் அடையாளம் காணப்பட்டது. அத்துடன் கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள இந்திய தொல்லியல் ஆய்வகம் (ஏ.எஸ்.ஐ) மற்றும் தமிழகத்தில் கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனம் (ஐ.எஃப்.ஜி.டி.பி) ஆகியவையும் திறந்து வைக்கப்பட்டது. கோவை விற்பனை நிலையத்தை வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவன இயக்குனர் டாக்டர் சி.குன்ஹி கண்ணன் திறந்து வைத்தார். இது இப்பகுதியில் தொடர்ந்து காட்சிப்படுத்தப்படும் பழங்குடி தயாரிப்புகளுக்கு ஊக்கமளிப்பதுடன் மற்றும் நாட்டில் உள்ள பழங்குடியினரின் நலனுக்கு ஆதரவாக விழிப்புணர்வை ஏற்படுத்தும். அவர்களின் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்தும். நவம்பர் 15 ஆம் தேதி 'பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி' பட்டியலின பழங்குடி மக்கள் கணிசமாக வசிக்கும் நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் 'வளர்ந்த இந்தியா சபத யாத்திரை' நிகழ்ச்சி நடைபெறும். இதன் ஒரு பகுதியாக, இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனத்தின் தென் மண்டல அலுவலக அதிகாரிகள் கர்நாடகா, தமிழ்நாடு, கோவா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்களில் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களை பிரபலப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகாவில் பத்தொன்பது வட்டங்கள், தமிழ்நாட்டில் பதினொரு வட்டங்கள், கோவாவில் ஐந்து வட்டங்கள் மற்றும் கேரளாவில் ஒரு வட்டம் ஆகியவை இதில் அடங்கும். இது உள்ளூர் பழங்குடி கைவினைஞர்கள், சுய உதவிக் குழுக்கள் (எஸ்.எச்.ஜி) மற்றும் தொடர்புடைய பழங்குடி அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களின் நன்மைகளைப் புரிந்துகொள்வதை ஊக்குவிப்பதாகும்.
***
ANU/PKV/IR/RR/KRS
(Release ID: 1977168)
Visitor Counter : 112