நிலக்கரி அமைச்சகம்
8-வது சுற்று வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலத்தை நவம்பர் 15-ம் தேதி மத்திய நிலக்கரி அமைச்சகம் தொடங்குகிறது
प्रविष्टि तिथि:
13 NOV 2023 6:08PM by PIB Chennai
நிலக்கரித் துறையில் மேலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையிலும், நிலக்கரியில் இந்தியாவை சுயசார்பு ஆக்குவதற்கான ஒரு படி முன்னோக்கிச் செல்லும் வகையிலும் வணிக நிலக்கரி சுரங்கங்களுக்கான 8 சுற்று ஏலங்களை வரும் 15ம் தேதியன்று தொடங்க நிலக்கரி அமைச்சகம் தயாராகி வருகிறது.
18.06.2020 அன்று பிரதமரால் வணிக சுரங்கத்தின் முதல் வெற்றிகரமான ஏலம் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போதிருந்து, நிலக்கரி அமைச்சகம் ஏழு சுற்று வணிக நிலக்கரி சுரங்க ஏலங்களை நடத்தியுள்ளது, மேலும் 91 சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன, அவை ஆண்டுக்கு 221 மில்லியன் டன் என்ற உச்ச மதிப்பிடப்பட்ட திறன் கொண்டவை.
மேலும், கனிமச் சட்டங்களின் திருத்தம் நிலக்கரித் துறையைத் திறப்பதற்கும், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு சமமான வாய்ப்பை உறுதி செய்வதற்கும், இறுதிப் பயன்பாட்டிற்கு எந்தத் தடையும் இல்லாமல் நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட அனுமதிப்பதற்கும் முக்கியப் பங்கு வகித்தது. இந்த சுரங்கங்களில் உள்ள நிலக்கரியை சொந்த நுகர்வு, விற்பனை அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தலாம்.
வணிகரீதியான நிலக்கரி சுரங்கத் தொழிலைத் தொடங்குவதன் மூலம், ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தல், அரசுக்கு வருவாயைப் பெருக்குதல், தனியார் பங்களிப்பு மூலம் நிலக்கரி விநியோகத்தை அதிகரித்தல் போன்ற எண்ணற்ற நன்மைகள் கிடைத்துள்ளன. முக்கியமாக, நிலக்கரி வளம் மிக்க மாநிலங்கள், இந்த ஏலங்கள் மூலம், கணிசமான வருவாயை ஈட்டி, பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், இப்பகுதி மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்கவும் தயாராக உள்ளன.
முந்தைய வெற்றிகரமான ஏலங்களை அடுத்து, வரவிருக்கும் 8வது சுற்று வணிக நிலக்கரி சுரங்க ஏலங்கள், இந்தத் துறையை முன்னோக்கி நகர்த்துவதற்கான அமைச்சகத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. மொத்தம் 35 நிலக்கரி சுரங்கங்கள் வரவிருக்கும் சுற்றில் வழங்கப்படும்.
இவற்றில், 14 நிலக்கரி சுரங்கங்கள் முழுமையாகவும், 21 சுரங்கங்கள் பகுதியாகவும் ஆராயப்படுகின்றன. கூடுதலாக, வணிக நிலக்கரியின் 2 வது சுற்று 7 இன் கீழ் 4 நிலக்கரி சுரங்கங்கள் வழங்கப்படுகின்றன, இதில் ஒரு சி.எம்.எஸ்.பி நிலக்கரி சுரங்கம் மற்றும் மூன்று எம்.எம்.டி.ஆர் நிலக்கரி சுரங்கங்கள் அடங்கும். இவற்றில் ஒன்று முழுமையாக தோண்டப்பட்டவை. மூன்று சுரங்கங்கள் பகுதியளவு தோண்டப்பட்டவையாகும்.
வணிக ரீதியான நிலக்கரி சுரங்க ஏலத்தில், நிலக்கரி விற்பனை மற்றும் அல்லது பயன்பாட்டிற்கு எந்தத் தடையும் இல்லை. மேலும், நிலக்கரி சுரங்க ஏலத்தில் பங்கேற்பதற்கான தொழில்நுட்ப அல்லது நிதி தகுதி அளவுகோல்கள் எதுவும் இல்லை.
வெற்றிகரமான ஏலதாரர்களுக்கு அனுமதிகள் மற்றும் ஒப்புதல்களை வழங்குவதற்கு வசதியாக நிலக்கரி அமைச்சகம் 'ஒற்றை சாளர அனுமதி அமைப்பு' என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடுத்த கட்ட ஏலத்தை தொடங்கி வைக்கிறார்.
8 வது சுற்று வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலங்கள் தொடங்கப்படுவது நிலக்கரி சுரங்கத் தொழிலில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். நிலக்கரி அமைச்சகத்தின் முற்போக்கான கொள்கைகள் தனியார் துறைக்கு சுரங்கங்களை விரைவாக ஒதுக்கீடு செய்ய வழிவகுத்துள்ளன, மேலும் வரவிருக்கும் ஏலங்களில் தொழில்துறையைச் சேர்ந்த மேலும் பல புதிய நிறுவனங்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுரங்கங்கள், ஏல விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பலவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை எம்.எஸ்.டி.சி ஏல தளத்தில் அணுகலாம். சதவீத வருவாய் பகிர்வு மாதிரியின் அடிப்படையில், வெளிப்படையான செயல்முறை மூலம் ஏலம் ஆன்லைனில் நடத்தப்படும்.
ANU/AD/BS/KRS
*************
(रिलीज़ आईडी: 1976742)
आगंतुक पटल : 179