புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 4.87 சதவீதமாக சரிவு

Posted On: 13 NOV 2023 5:30PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2012=100 அடிப்படையில் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டெண்  மற்றும் நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்திற்கான கிராமப்புற,நகர்ப்புற  மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் உணவு விலை குறியீட்டை வெளியிட்டுள்ளது. அகில இந்திய மற்றும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான துணைக் குழுக்கள் மற்றும் குழுக்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டெண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட 1114 நகர்ப்புற சந்தைகள் மற்றும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1181 கிராமங்களில் இருந்து வாராந்திர பட்டியலில் என்.எஸ்.ஓ, எம்.ஓ.எஸ்.பி.ஐ.யின் கள செயல்பாடுகள் பிரிவின் களப்பணியாளர்களின் தனிப்பட்ட வருகைகள் மூலம் விலை விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

 

நடப்பு அக்டோபர் மாதத்தில், என்.எஸ்.ஓ 99.8% கிராமங்கள் மற்றும் 98.6% நகர்ப்புற சந்தைகளிலிருந்து விலைகள் பெறப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்ட சந்தை வாரியான விலைகள் கிராமப்புறங்களுக்கு 89.0% மற்றும் நகர்ப்புறங்களுக்கு 92.0% ஆகும்.

 

பொது குறியீடுகள் மற்றும் நுகர்வோர் உணவு விலைக் குறியீடுகளின் அடிப்படையில் அகில இந்திய பணவீக்க விகிதங்கள் (புள்ளிக்கு புள்ளி அடிப்படையில் அதாவது கடந்த ஆண்டின் இதே மாதத்தில், அதாவது அக்டோபர் 2022 மற்றும் அக்டோபர் 2023 ஒப்பீடு நிலவரமும் கொடுக்கப்பட்டுள்ளன:

 

செப்டம்பர் மாதத்தின் இறுதி மற்றும் அக்டோபர் மாதத்துக்கான தற்காலிக கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த மாநிலங்களுக்கான பொது நுகர்வோர் விலை குறியீட்டெண் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

 

தமிழ்நாட்டில் 5.55 (எடை), 189.3(செப்டம்பர் இறுதி), 190.6(அக்டோபர் தற்காலிகம்) என கிராமப்புற நுகர்வோர் விலை குறியீட்டெண் நிலவியது

 

தமிழ்நாட்டில் 9.20(எடை) 188.3 (செப்டம்பர் இறுதி) 188.3 (அக்டோபர் தற்காலிகம்) என நகர்புற நுகர்வோர் விலை குறியீட்டெண் நிலவியது.

தமிழ்நாட்டில் 7.25 (எடை) 188.7 (செப்டம்பர் இறுதி) 189.8 (அக்டோபர் தற்காலிகம்) என ஒருங்கிணைந்த விலை குறியீட்டெண் நிலவியது.

 

 

பாண்டிச்சேரியில் 0.08 (எடை), 194.7(செப்டம்பர் இறுதி), 193.6(அக்டோபர் தற்காலிகம்) என கிராமப்புற நுகர்வோர் விலை குறியீட்டெண் நிலவியது

 

 

பாண்டிச்சேரியில் 0.27(எடை), 186.9(செப்டம்பர் இறுதி), 187.8(அக்டோபர் தற்காலிகம்) என நகர்புற நுகர்வோர் விலை குறியீட்டெண் நிலவியது

 

 

பாண்டிச்சேரியில் 0.17 (எடை), 188.9(செப்டம்பர் இறுதி), 189.3(அக்டோபர் தற்காலிகம்) என ஒருங்கிணைந்த நுகர்வோர் விலை குறியீட்டெண் நிலவியது

 

ANU/ AD/BS/KRS

 

***


(Release ID: 1976734) Visitor Counter : 142