தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

69வது தேசிய திரைப்பட விருது பெற்ற திரைப்படங்களின் பொதுத் திரையிடல்

प्रविष्टि तिथि: 11 NOV 2023 5:05PM by PIB Chennai

2021 ஆம் ஆண்டின் 69வது தேசிய திரைப்பட விருது பெற்ற திரைப்படங்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத் திரையிடல் 2023 நவம்பர் 14 முதல் 25 வரை தில்லியில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிரி ஃபோர்ட் ஆடிட்டோரியம் II இல் நடைபெறும் 12 நாள் திரையிடலின் போது 18 மொழிகளில் இருந்து 30 சிறப்புத் திரைப்படங்களும், 27 குறும்படங்களும் திரையிடப்படும்.

திரைப்படங்களின் பொதுத் திரையிடல், 69வது தேசிய திரைப்பட விருதுகளில் கௌரவிக்கப்படும் மிகவும் அழுத்தமான மற்றும் குறிப்பிடத்தக்க திரைப்படங்களின் தேர்வாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்கம் மற்றும் பல வகைகளில் சிறந்த சாதனைகளுக்காக தேர்வு பெற்றவையாகும்.   பொதுத் திரையிடல்கள் பார்வையாளர்களுக்கு இந்தியக் கதைசொல்லல் மற்றும் சினிமாத் திறமையின் செழுமையான கதைப்பின்னலில் தங்களை மூழ்கடிக்க இணையற்ற வாய்ப்பை வழங்கும்.

அனைத்து படங்களும் ஆங்கில உபதலைப்புகளைக் கொண்டுள்ளன.  நுழைவு வாயில் எண். 5 ல், செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையுடன் முதலில் வருபவருக்கு முதலில் அனுமதி  வழங்கப்படும் என்ற அடிப்படையில் இலவசமாக அனுமதிக்கப்படுவர்.

****  

PKV/BS/DL


(रिलीज़ आईडी: 1976407) आगंतुक पटल : 126
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Kannada , English , हिन्दी , Manipuri , Bengali , Urdu