விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அக்டோபர் 2 முதல் 31 வரை வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் சிறப்பு தூய்மைப்பணி முகாம் 3.0

Posted On: 08 NOV 2023 3:50PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் இருந்து உத்வேகம் பெற்று, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை  மற்றும் அதன் துணை நிறுவனங்களில்   நிலுவையில் உள்ள கோப்புகளை குறைத்தல்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியம் மற்றும் மூன்று மத்திய வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கல்லூரிகள் 3.0 சிறப்பு தூய்மை இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றன.

இத்துறையின் 19843 கோப்புகள், 4717 மின்-கோப்புகளை மறுஆய்வு செய்யவும், 3326 தளங்கள், இடங்களில் தூய்மை குறித்த சிறப்பு இயக்கத்தை நடத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி 24683 கோப்புகள் மற்றும் 5561 மின்-கோப்புகளை மதிப்பாய்வு செய்ததன் மூலம் இத்துறை மேற்கூறிய இலக்குகளை அடைந்துள்ளது. மேலும், இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் 150% க்கும் அதிகமான இடங்களில் அதாவது 4987 தளங்கள், இடங்களில் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது.

மேலும், சுமார் 4,03,996 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டு, சுமார் 275 டன் குப்பைகளை அகற்றியதன் மூலம் ரூ.40,73,586/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

***

ANU/PKV/BS/AG/KPG


(Release ID: 1975688) Visitor Counter : 138


Read this release in: Telugu , English , Urdu , Hindi